வெறும் 50 லட்சம் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஒன்று 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து 2025-ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய திரைப்படமாக உருவெடுத்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியடைந்த படம் எது என்று கேட்டால், காந்தாரா சாப்டர் 1 என்பது தான் அனைவரின் பதிலாக இருக்கும். அதேபோல் 2025-ம் ஆண்டில் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்த படமாகவும் காந்தாரா தான் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். காந்தாராவை விட அதிக மடங்கு லாபத்தை வாரிசுருட்டிய படம் ஒன்று இருக்கிறது. அந்த படத்தின் பெயர்கூட நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட முன்னணி திரையுலகை சேர்ந்த படமில்லை. அது ஒரு குஜராத்தி படம். அதைப்பற்றி தான் பார்க்க உள்ளோம்.
24
அதிக லாபம் ஈட்டிய படம் எது?
2025-ம் ஆண்டின் மிகவும் லாபகரமான படத்தின் பெயர் லாலு கிருஷ்ண சதா சஹாயதே. அங்கித் சாகியா இயக்கிய இப்படம் கடந்த அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. இது ஒரு ஆன்மீக திரைப்படம். இப்படத்தை வெறும் 50 லட்சம் பட்ஜெட்டில் தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்படம் தயாரிப்பாளருக்கு 200 மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது. குஜராத்தி மொழியில் வெளியான படங்களில் மிகப்பெரிய வசூல் அள்ளிய திரைப்படம் என்கிற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.
34
லாலு கிருஷ்ண சதா சஹாயதே படத்தின் வசூல்
லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. அதில் இந்தியாவில் மட்டும் இப்படம் 95.5 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இதுதவிர வெளிநாடுகளில் ரூ.5.5 கோடி வசூலித்துள்ளதாம். குஜராத்தி மொழியில் வெளியான படங்களில் இதுவரை எந்த ஒரு படமும் 100 கோடி வசூலை எட்டியதில்லை. அந்த சாதனையை முதன்முறையாக படைத்துள்ளது லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம் தான்.
இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமான காந்தாரா கூட, படத்தின் பட்ஜெட்டைவிட 90 மடங்கு தான் லாபம் ஈட்டி இருந்தது. ஆனால் லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம் அப்படத்தின் பட்ஜெட்டை விட 200 மடங்கு அதிக லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது. குஜராத்தி திரையுலகிற்கு இப்படம் ஒரு கேம் சேஞ்சராக மாறி இருக்கிறது. லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம் 100 கோடி வசூலைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் 125 கோடி வரை வசூலை வாரிக்குவிக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.