Pandian Stores 2 serial today 649th Episode: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 649ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 649ஆவது எபிசோடில் செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகளுடன் இன்றைய எபிசோடு தொடங்கியது. இதில், செந்தில் 7 மணிக்கு எழுந்திரிப்பதாக சொன்ன நிலையில் 8.30 மணிக்கு தான் எழுந்து ஆபிஸிற்கு புறப்பட்டார்.
27
செந்தில் மீனா
அப்போது பால் வாங்கவில்லை, டிபன் செய்யவில்லை என்று மீனா சொல்ல, சரி இன்று ஒரு நாள் வெளியில் சாப்பிட்டுக் கொள்வோம் என்று செந்தில் சொல்லிவிட்டு இருவரும் டிபன் வாங்கிக் கொண்டு ஆபிஸிற்கு சென்றனர். பின்னர் பூரியை சுத்தில் வைத்து தான் உடைக்க வேண்டும் என்று மீனா சொல்ல, இட்லி கீழே விழுந்தால் டைல்ஸ் கூட உடைந்துவிடும் என்று செந்தில் சொல்ல மீனா தனது மாமியாரின் புராணத்தை ஆரம்பித்தார்.
37
ராஜீ மற்றும் கதிர்
அதற்கு செந்தில் இல்ல இல்ல டிபன் நல்லா தான் இருக்கு என்று சாப்பிட ஆரம்பித்தார். இது ஒரு புறம் இருந்தாலும் அடுத்ததாக ராஜீ மற்றும் கதிர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் கதிரை தேடி ஒரு பெண் வரவே ராஜீக்கு பயம் வந்துவிட்டது. உடனே எனக்கு கதிர் தான் வேணும் என்று கேட்டு, அவருக்கு போன் போட ஆரம்பித்த நிலையில் கதிர் அங்கு வந்துவிட்டார்.
47
கதிரை தேடி வந்த பெண்
கதிரும், அந்த பெண்ணும் புறப்பட தயாரான நிலையில் ராஜீ கதிருடன் தனியாக பேசினார். அப்போது நீ டிரைவ் பண்ண கூடாது. அந்த பெண்ணுடன் போக் கூடாது. வேறொரு டிரைவரை அனுப்பி வை என்று கூறினார். இதெல்லாம் கதிர் மீது உள்ள காதலின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. அப்போதுதான் கதிர் அந்த பெண்ணுடைய தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை. அவரை தான் செக்கப்பிற்கு கூட்டிக் கொண்டு செல்கிறேன்.
57
நான் வந்தால் தான் தாத்தா பாதுகாப்பாக இருப்பதாக சொல்கிறார்
நான் வந்தால் தான் தாத்தா பாதுகாப்பாக இருப்பதாக சொல்கிறார் என்றார். அதனால், நான் போகலாமா வேண்டாமா என்று கேட்க சரி நீ போ. நீயும் வரயா என்று கதிர் ராஜீயை கேட்டார். இல்லை இல்லை நீ மட்டும் போ என்று சொல்லி அந்த பெண்ணுடன் கதிரை அனுப்பி வைக்கிறார்.
67
தங்கமயில் மற்றும் சரவணன்
அடுத்ததாக தங்கமயில் மற்றும் சரவணன் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தங்கமயில் அயர்ன் செய்து வைத்து சட்டையை சரவணன் போடவில்லை என்று ஒரு பஞ்சாயத்து. அப்போது சரவணன் உண்மையை சொல்ல வருவதற்கு முன்னதாகவே சுதாரித்துக் கொண்ட தங்கமயில் அவர் என்ன சொல்லிடபோகிறார். திரும்பவும் குழந்தை விஷயத்தை தான் ஆரம்பிப்பார் என்று சொல்லி அழுதார். இதைத் தொடர்ந்து கோமதி அவரை கண்டிக்க அதற்குள்ளாக சரவணன் கடைக்கு சென்றார்.
77
சரவணனுக்கு அட்வைஸ் செய்த பாண்டியன்
அங்கும் அவருக்கு தங்கமயில் போன் போடவே சரவணன் எடுக்கவில்லை. பின்னர், பாண்டியனுக்கு போன் போட்ட தங்கமயில் மாமா, நான் வரும் போது டிபன் எடுத்துக் கொண்டு வருகிறேன். இதோ கிளம்பிவிட்டேன். நான் போன் போட்டேன் அவர் எடுக்கவில்லை. நீங்கள் போன் கொடுத்தாலும் அவர் பேசப்போவதில்லை என்று அப்பாவியாக பேசினார். அதன் பிறகு பாண்டியன் ஏண்டா கடைக்கு வரும் கஸ்டர்களிடம் நல்லா தான் பேசுற, அப்புறம் என்ன தங்கமயில் கிட்ட மட்டும் ஏன் சரியாக பேசவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.