புளுகுமூட்டை ரோகிணியை புரட்டி எடுத்த விஜயா... முத்துவை சீண்டிய அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Nov 28, 2025, 08:45 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை ஹோட்டலில் சந்திக்க சென்றிருந்த ரோகிணியை விஜயா பார்த்துவிட்ட நிலையில், கடும் கோபம் கொள்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் குடிப்பழக்கத்தால் டென்ஷன் ஆன மீனா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவருக்கு போன் போட்டு நேரில் சந்திக்க வருமாறு அழைக்கிறார் ரோகிணி. இதையடுத்து ஓட்டல் ஒன்றில் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தன்னைப்பற்றிய உண்மைகளை உன் அம்மாவிடம் சொல்லிடாதீங்க என கூறுகிறார் ரோகிணி. அதைக்கேட்டு கடுப்பான மீனா, ரோகிணியை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அந்த ஓட்டலைவிட்டு மீனாவும், ரோகிணியும் ஒன்றாக வெளியே வருவதை அந்த வழியாக ஆட்டோவில் சென்ற விஜயா பார்த்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ரோகிணியை லாக் பண்ணிய விஜயா

வீட்டுக்கு வந்த ரோகிணியிடம் எங்கு போயிட்டு வர்ற என விஜயா கேட்க, அதற்கு அவர் கிளயண்ட் இருவரை பார்த்துவிட்டு ஷோரூம் சென்றுவிட்டு வருவதாக சொல்கிறார். வேறு எங்கேயும் போகலையா என விஜயா கேட்க, இல்லை என கூறுகிறார் ரோகிணி. பின்னர் கோபமடைந்த விஜயா, திரும்பவும் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா, நீ மீனாவை பார்த்துவிட்டு வந்ததை நான் பார்த்தேன் என சொல்ல, உடனே பிளேட்டை மாற்றிய ரோகிணி, தான் சாப்பிட அந்த ஓட்டலுக்கு சென்றதாகவும், அப்போது மீனா அங்கு பூ கொடுக்க வந்ததாகவும் ஒரு பொய்யை சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

35
முத்துவிடம் வம்பிழுத்த அருண்

சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் முத்து, ரோட்டோரம் உள்ள கடையில் இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருக்க, அப்போது அந்த வழியாக வந்த அருண், அவரிடம் வம்பிழுப்பதற்காகவே அந்த இளநீர் கடைக்கு வருகிறார். செய்யுற தப்பெல்லாம் பண்ணிட்டு, நல்லவன் மாதிரி மாலை போட்டுக்குறாங்க. பொண்டாட்டிய சந்தோஷமா வச்சிக்க துப்பில்ல இவங்கெல்லாம் எதுக்கு மாலை போடுறாங்களோ என ஜாடை மாடையாக பேசி வம்பிழுக்கிறார். இதனால் கோபமடையும் முத்து அவரை அடிக்கப் பாய, அவரை தடுத்து நிறுத்தும் செல்வம், அவன் வேண்டுமென்றே வம்பிழுக்கிறான் நீ காருக்கு போ என சமாதானப்படுத்துகிறார்.

45
வீட்டை விட்டு வெளியேறும் முத்து

இதையடுத்து வீட்டுக்கு செல்கிறார் முத்து. சாமியே சரணம் ஐயப்பா என கத்தியபடி அவர் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க, அவரைப் பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். முத்து மாலை போட்டுள்ளதால் இனி வீட்டில் யாருமே அசைவம் சாப்பிடக் கூடாது என சொல்கிறார் அண்ணாமலை. அதற்கு மனோஜ் மற்றும் விஜயா இருவரும் தங்களால் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. அவனை வேண்டுமானால் கொஞ்ச நாள் வெளியே தங்கிக் கொள்ள சொல்லுங்க என சொல்ல, முத்துவும் வேறுவழியின்றி வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து, கொஞ்ச நாள் நான் கார் ஷெட் அருகே உள்ள ரூமில் தங்கிக் கொள்வதாக சொல்கிறார்.

55
முத்துவின் பூஜையில் மீனா

முத்து தன்னுடைய கார் ஷெட்டில் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த பூஜையில் மீனாவும் அவரின் குடும்பத்தினரோடு வந்து கலந்துகொள்கிறார். அப்போது அவருக்கு இளநீர் கொடுத்து ஐஸ் வைக்கிறார் முத்து. இதனால் முத்து மீது இருந்த கோபம் மீனாவுக்கு குறைந்ததா? மீனா மீண்டும் முத்து வீட்டிற்கு சென்றாரா? முத்து மீனா இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி தான் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories