உலகமகா நடிப்புடா சாமி – அழுது அழுது சரவணன் மீது வீணா பழி சொல்லும் தங்கமயில்!

Published : Nov 27, 2025, 06:40 PM IST

Thangamayil Finds Hope in Gomathi : சரவணனை பார்த்தால் ஒரு மாதிரியாக பேசுவதும், வீட்டில் உள்ள மற்றவர்களை பார்க்கும் போது ஒரு மாதிரியாக நடிப்பதாகவும் தங்கமயில் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

PREV
18
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நாளுக்கு நாள் புதுவிதமாக சுவாரஸ்யமான சம்பங்கள் நடக்கிறது. அந்த வகையில் இன்றைய 648ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடானது ராஜீ மற்றும் கதிர் தொடர்பான காட்சிகளோடு தொடங்குகிறது. அவர்கள் பேசுவதை கேட்டு சரவணன் வந்து கதவை திறக்கிறார்.

28
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு

மேலும், அவர் ஹாலில் படுத்திருப்பதை கண்டு தங்கமயிலுக்கும் உங்களுக்கும் இடையில் ஏதேனும் சண்டையா என்று கதிர் கேட்க அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதைத் தொடர்ந்து பழனிவேல் எங்கே என்று பாண்டியன் கேட்கிறார். டேய் பழனி பழனி என்று கூப்பிட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். டெலிவரி நிறைய இருக்கு எங்கடி உன்னுடைய தம்பி காலையிலேயே கடைக்கு போயிட்டானா என்று கேட்கிறார். அதற்கு சரவணன் ஆமாம் அப்பா அவர் அவருடைய கடைக்கு போய்விட்டார் என்றார்.

38
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

மேலும், இனி எல்லா வேலையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சரவணன் கூற, அண்ணே நானும் கடைக்கு வருகிறேன் என்று கதிர் சொல்ல பின்னர் தங்கமயில் அது எதுக்கு மாமா நான் இருக்கிறேன். அப்பா இருக்காரு, ஆகையால் கடையில் உள்ள வேலைகளை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு என்ன 100 கை, 1000 காலா இருக்கா என்று கேட்க, மேலும், எல்லா வேலைகளையும் எல்லோரும் சேர்ந்து பார்த்துக் கொள்வோம்.

48
தங்கமயில் நாடகம்

எனக்கும் வீட்டில் வேலைகள் இருக்கத்தா செய்கிறது. அதையெல்லாம் முடித்துக் கொண்டு நான் கடைக்கு வந்துவிடுகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து பார்த்துக் கொள்வோம் என்றார். ஆனால், அதில் சரவணனுக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை. இன்னும் கொஞ்ச நாள் எப்படி பிஸினஸ் போகுது என்று பார்த்து அதன் பிறகு கடை வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வோம் என்று பாண்டியன் கூற அதோடு அந்த காட்சி முடிந்தது.

58
பாண்டியன் மற்றும் பழனிவேல்

அடுத்த காட்சியாக மீனா மற்றும் செந்தில் தொடர்பான காட்சிகள் வர இதில் மீனாவிற்கு கனவு வருகிறது. அதில், செந்தில் காலையில் எழுந்து குளித்து முடித்து பட்டையெல்லாம் போட்டு கையில் மணி அடித்துக் கொண்டு கற்பூரம் ஏற்றிக் கொண்டு தனது மனைவிக்கு இவ்வளவு அழகு கொடுத்த மருதமலை, பழனி மலை முருகனே கொஞ்சம் அறிவு கொடுத்திருக்க கூடாது? எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறா, என்னை மட்டும் காப்பாற்று, மீனா டிபன் எல்லாம் ரெடி வந்து சாப்பிடு என்று சொல்வது போன்று அவருக்கு கனவு வர அப்போது மொபைல் போன் அலாரம் அடிக்கிறது.

68
மீனா மற்றும் செந்தில்

அதைக் கேட்டு எழுந்த மீனா கனவா இவராவது நேரத்துல எழுந்திருப்பதாவது என்று கூறிக் கொண்டே செந்திலை எழுப்புகிறார். ஆனால், அவர் எழுந்திரிக்கவில்லை. பின்னர் 7 மணிக்கு எழுந்திருக்கிறேன் என்று செந்தில் சொல்லிவிட்டார். இன்றைய எபிசோடின் கடைசி சீனாக தங்கமயில், அரசி மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

78
தங்கமயில் மற்றும் சரவணன் சண்டை

அதில், ராஜீ சும்மா இருக்காமல் தங்கமயில் என்ன அக்கா அங்களுக்கும் மாமாவிற்கும் இடையில் சண்டையா என்று கேட்க, அதற்கு தங்கமயில் என்ன சொல்ல, அவருடன் பேசி ரொம்ப நாள் ஆச்சு. அவர் என்னுடன் பேசுவதே இல்லை. குழந்தை இல்லை என்பதற்காக என்னுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

88
அழுது அழுது சரவணன் மீது வீணா பழி சொல்லும் தங்கமயில்

யாருக்கும் நல்லது செய்யக் கூடாது. நான் என்ன தப்பு செய்தேன் அப்படி இப்படி என்று பேசி கடைசியில் பேசாமல் நான் என்னுடைய வீட்டிற்கே சென்றுவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கோமதியும் வந்துவிட்டார். பிறகு அவர் அழுவதை பார்த்து ஏய் என்னடி மீண்டும் சரவணன் பிரச்சனை செய்கிறானா என்று கேட்டு அவனிடம் இதைப் பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன். எங்கு, வீட்டில் ஒன்று மாற்றி ஒன்று பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்று பேசுவதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories