எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை ராமசாமி மெய்யப்பனிடம் இருந்து காப்பாற்றிய ஜனனி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் போலீஸிடம் சிக்கி இருக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தென்காசியில் சக்தியை கடத்தி வைத்திருந்த ராம்சாமி மெய்யப்பன், துப்பாக்கி முனையில் ஜனனியையும் பிடித்து வைத்திருக்க, தன்னிடம் இருந்த பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி, அவரை வீழ்த்திவிட்டு எஸ்கேப் ஆகிறார். இதையடுத்து சக்தி கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்ற ஜனனி, அங்கிருந்த சவப்பெட்டியில் சக்தி மயக்க நிலையில் இருப்பதை பார்த்து கதறி அழுகிறார். இதையடுத்து சக்தியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்து அவரை தூக்கிச் செல்கிறார் ஜனனி. இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஜனனியை மடக்க சொன்ன ராமசாமி
சக்தியை ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறார் ஜனனி. அப்போது போலீஸ் ஒருவருக்கு போன் போட்ட ராமசாமி மெய்யப்பன், ஜனனியின் போட்டோவை அந்த போலீஸுக்கு அனுப்பி, இந்த பெண் ஆம்புலன்ஸில் வந்துகொண்டிருப்பதாகவும், அவரை மடக்கிப் பிடித்து, உன்னுடைய கண்ட்ரோலில் இருக்கும் ஏரியாவுக்கு அந்த பெண்ணை கொண்டுவா என சொல்ல, அதற்கு அந்த போலீஸ் அதிகாரி, சார் ஆம்புலன்ஸை மடக்கக்கூடாது சார், பிரச்சனை ஆகிடும் என சொல்கிறார். உடனே ராமசாமி, சொல்றதை மட்டும் செய், உனக்கு நிறைய பணம் கொடுக்கிறேன் என சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.
34
ஆம்புலன்ஸை மடக்கும் போலீஸ்
பின்னர் சக்தியை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸை போலீசார் மடக்குகிறார்கள். உடனே இறங்கி வரும் ஜனனி, எமர்ஜென்சியா போயிட்டு இருக்கோம், என்னுடைய கணவர் சீரியஸா இருக்கார் தயவு செஞ்சு விடுங்க என கேட்க, அதற்கு அவர், இந்த வழியாக ஸ்டார் ஆமை கடத்தப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கு அதனால் சோதனை செய்துவிட்டு தான் அனுப்புவோம் என கூறுகிறார். ஆம்புலன்ஸில் நோயாளி இருக்கும்போது நிறுத்தக் கூடாது அது சட்டப்படி குற்றம் என ஜனனி சொல்ல, நாங்க எங்க வேலையை தான் செய்கிறோம் என சொல்லிவிட்டு சோதனை செய்ய செல்கிறார் அந்த போலீஸ் அதிகாரி.
சோதனை என்கிற பெயரில் அந்த போலீஸ் அதிகாரி நீண்ட நேரம் இழுத்தடிக்கிறார். இதனால் பதற்றமடையும் ஜனனி, தயவு செஞ்சு ஆஸ்பத்திரிக்கு போக விடுங்க என கெஞ்சுகிறார். அதற்கு அந்த போலீஸ், எனக்கு உன்மேல தான் டவுட்டா இருக்கு என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? போலீசிடம் இருந்து தப்பித்து, சக்தியை ஜனனி காப்பாற்றினாரா? ராமசாமி மெய்யப்பனின் சூழ்ச்சி வென்றதா? தன்னை மடக்கிய போலீஸும் ஆதி குணசேகரனின் ஆள் என்பது ஜனனிக்கு தெரியவந்ததா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் பதில் கிடைக்கும்.