நடிகை சமந்தா:
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்ட 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்ற இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் இவர் நடித்த 'யசோதா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் தனக்கு மயோசிட்டிஸ் பிரச்சனை உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். அரியவகை தசை அழிற்சி நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் சமந்தா, வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. எழுந்து கூட நிற் கமுடியாத நிலையில் இருக்கும் அவர் விரைவில் உடல்நலம் தேறி நடிக்க வரவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.