3bhk movie Box Office Collection : நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து நடித்து வெளியான 3BHK படம் எத்தனை கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் எடுத்திருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
3bhk movie Box Office Collection : கடந்த 2017ல் திரைக்கு வந்த 8 தோட்டாக்கள் படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவராக தன்னை எப்போதும் நிரூபித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கிய படம் தான் குருதி ஆட்டம். அதன் பிறகு 13 ஆண்டுகள் கால இடைவெளிக்கு பிறகு அவரது இயக்கத்தில் வெளியான படம் தான் 3BHK.
25
3BHK பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்தப் படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், யோகி பாபு, விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். கடந்த 4ஆம் தேதி வெளியான இந்தப் படம் முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய படமாக திரைக்கு வந்தது. ஒரு சாதாரண நடுத்தர மக்களின் கனவு என்ன, நமக்கு என்று ஒரு சிறிய வீடு வேண்டும். அதில், அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும்.
35
சித்தார்த் நடிப்பில் வெளியான 3BHK
ஆனால், ஒரு சாதாரண நடுத்தர மக்களுக்கு வீடு என்பது எட்டா கனியாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சாதாரண மக்களை சித்தரிக்கும் வகையில் தான் இந்தப் படம் வெளியாகியிருந்தது. இதில், அப்பா, அம்மா, மகன் மற்றும் மகள். இதில், அப்பா மற்றும் அம்மாவிற்கு ஒரு ரூம், மகனுக்கு ஒரு ரூம், மகளுக்கு ஒரு தனி ரூம். ஆக மொத்தம் 3 பெட்ரூம், ஒரு கிச்சன், ஒரு ஹால் என்று படத்தின் டைட்டிலும், கதையும் கச்சிதமாக பொருந்தி வெளியாகியிருக்கும் படம் தான் 3BHK.
45
சரத்குமார், தேவயானி இணைந்து நடித்த 3BHK
படம் வெளியாகி 8 நாட்கள் கடந்த நிலையில் மிடில் கிளாஸ் வாழ்க்கையை சித்தரிக்கும் 3BHK படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம். இந்தப் படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.1.5 கோடி வசூல் குவித்தது. அதுமட்டுமின்றி 3 நாட்களில் மட்டும் இந்தப் படம் ரூ.4.7 கோடி வசூல் குவித்திருப்பதாக ஜீதமிழ் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
55
3BHK பாக்ஸ் ஆபிஸ் வசூல்
படம் வெளியாகி 8 நாட்கள் கடந்த நிலையில் 3BHK படம் உலகளவில் ரூ. 9 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் படிக்காமல் அடிக்கடி தோல்வி அடையும் பையனுக்காக அப்பா அடுத்தடுத்து செலவு செய்கிறார். ஆனால், அவர் செலவு செய்யும் பணம் எல்லாம் கருகி வீணாகிறது. எப்படி என்றால் அடுத்தடுத்து தோல்வி தான் காரணம்.
தனக்கு என்ன பிடிக்கும் என்பதை படிக்காமல் அப்பா சொன்னார் என்பதற்காக கம்யூட்டர் சயின்ஸ் எடுத்து படிக்க அதனால் ஏற்பட்ட தோல்வி, கடைசியில் மகன் என்ன செய்தார் என்ற சுவாரஸ்யத்தோடு இந்தப் படம் வெளியாகியிருந்தது.