மூன்றே படத்தில் 3000 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோயின்! யார் இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின்?

First Published | Jan 16, 2025, 1:11 PM IST

பிரபல நடிகை ஒருவர் நடித்த மூன்று படங்களும் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.3000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.

Box Office queen of india

அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர் தற்போது பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அந்த நடிகை தமிழிலும் 2 படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றியடைந்தன. 

Actress with 3 Pan Indian Hit

தற்போது பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிசியான அவர் அங்கு அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவருக்கு செம டிமாண்ட் உள்ளது. இந்த நடிகை சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றியை ருசித்ததோடு, அப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகரை காதலித்தார். 

Tap to resize

Actress Who Starred 3 Movies Collect 3000 Crores

அந்த காதல் சக்சஸ் ஆனதால் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால் திருமணத்தால் கெரியருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்ததால், திருமணத்தை பாதியில் நிறுத்தினார் அந்த நடிகை. அவரின் இந்த முடிவு அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... எனக்கு பீலீங்ஸ் பாடல் ஷூட் கஷ்டமாகவே இருந்தது: ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!

Rashmika Mandanna

காதல் முறிவுக்கு பின் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட் ஆனதால் ராசியான நடிகை என பெயரெடுத்த அவர், வரிசையாக 3 பான் இந்தியா ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இந்த 3 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. 

Box Office Queen Rashmika

இதில் மற்றொரு ஒற்றுமை என்னவென்றால் இந்த 3 படங்களிலும் இந்த நடிகையின் பங்களிப்பு வெறும் 20 சதவீதம் தான் இருந்தது. ஆனால் அதிலேயே ஸ்கோர் செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். அந்த நடிகை வேறுயாருமில்லை, நடிகை ராஷ்மிகா மந்தனா தான். இவர் 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு வருடங்களில் 3 படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

Rashmika Hit Movies

அதில் ஒன்று தமிழ் படம், மற்றொரு இந்தி படம், இன்னொன்று தெலுங்கு படம். இந்த 3 படங்களும் வசூலை வாரிக்குவித்துள்ளது. அதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த வாரிசு திரைப்படம் ரூ.310 கோடி வசூலித்தது. இதையடுத்து இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.917 கோடி வசூலித்தது. 

Rashmika Mandanna Pan India Success

அதேபோல் கடந்த ஆண்டு தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது. ராஷ்மிகா கடைசியாக நடித்த 3 படங்களும் வசூல் மழை பொழிந்துள்ளதால் அவர் பாக்ஸ் ஆபிஸ் குயினாக உருவெடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... காலில் கட்டு போட்டு கன்னத்தில் கைய வச்சு சைலண்டா உட்கார்ந்திருந்த ராஷ்மிகா மந்தனா!

Latest Videos

click me!