மெரினா படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், 3, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, மிஸ்டர் லோக்கல், டாக்டர், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, பிரின்ஸ், மாவீரன், அயலான் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் திரைக்கு வந்தது. இந்த ஒரு படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.