விருமன் பட வாய்ப்பை நழுவவிட்ட 3 நடிகைகள்... இறுதியில் தட்டித்தூக்கிய ஷங்கர் மகள் - அந்த 3 பேர் யார் தெரியுமா?

Ganesh A   | Asianet News
Published : Jan 18, 2022, 06:18 AM IST

விருமன் படத்தில் நடிகை அதிதி திறம்பட நடித்துள்ளதாக இயக்குனர் முத்தையாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் கார்த்தி - அதிதி இடையேயான கெமிஸ்ட்ரி படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

PREV
15
விருமன் பட வாய்ப்பை நழுவவிட்ட 3 நடிகைகள்... இறுதியில் தட்டித்தூக்கிய ஷங்கர் மகள் - அந்த 3 பேர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது விருமன் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடித்துள்ளார். 

25

இப்படம் மூலம் அவர் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பருத்திவீரன் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் தேன்மொழி என்கிற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அதிதி நடித்துள்ளார். இப்படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய 'முத்தையா' இயக்கி உள்ளார்.

35

மேலும் பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி, சூரி, இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

45

இந்நிலையில், விருமன் படத்தில் ஷங்கர் மகள் ஹீரோயின் ஆனது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி அல்லது ராஷ்மிகா மந்தனாவை தான் நடிக்க வைப்பதாக இருந்ததாம். இதற்காக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது கால்ஷூட் பிரச்சனையால் மூவரும் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

55

இதையடுத்து தான் இந்த வாய்ப்பு ஷங்கர் மகளுக்கு வழங்கப்பட்டதாம். இப்படத்தில் நடிகை அதிதி திறம்பட நடித்துள்ளதாக இயக்குனர் முத்தையாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் கார்த்தி - அதிதி இடையேயான கெமிஸ்ட்ரி படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories