samantha : யம்மாடியோ... நடிக்க கூட இவ்வளவு வாங்கலையே! ஐட்டம் சாங்கிற்காக சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Ganesh A   | Asianet News
Published : Jan 17, 2022, 01:10 PM IST

‘ஊ சொல்றியா’ பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட நடிகை சமந்தா வாங்கிய சம்பளம், அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. 

PREV
15
samantha : யம்மாடியோ... நடிக்க கூட இவ்வளவு வாங்கலையே! ஐட்டம் சாங்கிற்காக சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா கடந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலித்தார். 

25

தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

35

இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்பாடலுக்காக படத்தை பார்த்தவர்கள் ஏராளம்.

45

படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, சம்பளத்தையும் அதிகமாக தருவதாக கூறி ஆட வைத்தாராம். அதன்படி இப்பாடலில் கவர்ச்சி நடனம் ஆட நடிகை சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

55

‘ஊ சொல்றியா’ பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட நடிகை சமந்தா வாங்கிய சம்பளம், அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. இதனால் சமீப காலமாக நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் போல தெரிகிறது. சமந்தாவை தொடர்ந்து ரெஜினா, தமன்னா ஆகியோர் ஐட்டம் சாங்கிற்கு நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories