March 14 OTT Release Movies : மார்ச் மாதம் தியேட்டரில் பெரிய படங்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் ஓடிடியில் கடந்த வாரம் அஜித் நடித்த விடாமுயற்சி, சாய் பல்லவியின் தண்டேல் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இந்த நிலையில், மார்ச் 14ந் தேதி ஏராளமான தமிழ் படங்களும், பிற மொழி திரைப்படங்களும் ஓடிடியில் போட்டி போட்டு ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
24
ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள்
தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் காதலர் தின ஸ்பெஷலாக வெளிவந்த 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் மார்ச் 14ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா என இரு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. அடுத்தபடியாக தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் ராஜாக்கிளி. இப்படம் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ஓடிடிக்கு வந்துள்ளது. இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
அடுத்ததாக சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த ராமம் ராகவம் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதுதவிர நட்டி நட்ராஜ் நடித்த சீசா திரைப்படம் ஆஹா மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. நடிகை சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவான ரிங் ரிங் திரைப்படமும் இந்த வாரம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது. நடிகை லிஜோமோல் நடித்த காதல் என்பது பொதுவுடைமை படமும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
44
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிற மொழி படங்கள்
தெலுங்கில் மம்முட்டி நடித்த ஏஜண்ட் திரைப்படம் சோனி லிவ் தளத்திலும், ஹத்யா திரைப்படம் அமேசான் பிரைமிலும், பராக்கிரமம் படம் ஈடிவி வின் தளத்திலும், அர்ஜுனா பல்குனா அமேசான் பிரைமிலும் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அதேபோல் மலையாள படங்களான பொன்மான் ஹாட்ஸ்டாரிலும், த்ராயம் அமேசான் பிரைமிலும், தி மலபார் டேல்ஸ் சிம்ப்ளி சவுத் தளத்திலும் வெளியாகி உள்ளது. ஆங்கிலத்தில் கிளாடியேட்டர் 2 அமேசான் பிரைம் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்தியில் வன்வாஸ் ஜீ5 தளத்திலும், அசாத் நெட்பிளிக்ஸிலும், ஆச்சாரிபா ஹாட்ஸ்டாரிலும், பி ஹாப்பி அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது.