இலங்கையில் உருவான மதுரை ரயில் நிலையம்; பிரத்யேக செட்டில் பரபரக்கும் பராசக்தி ஷூட்டிங்!

Published : Mar 13, 2025, 07:32 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும், பராசக்தி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.  

PREV
15
இலங்கையில் உருவான மதுரை ரயில் நிலையம்; பிரத்யேக செட்டில்  பரபரக்கும் பராசக்தி ஷூட்டிங்!

அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் லெவல் வேற மாதிரி மாறிவிட்டது. அடுத்தடுத்து மாஸ் இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் ராம்நாத், பிரித்விராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
 

25
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100ஆவது படம்

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமக்கிறார். இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25ஆவது படம். ஆதலால், இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பராசக்தி படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கும் சிவகார்த்திகேயன்; ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!

35
பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது:

சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் தனது 40ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இதையடுத்து இயக்குநர் சுதா கொங்கரா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது.
 

45
சிவகார்த்திகேயன் 11ஆம் தேதி இலங்கை சென்றார்.

பராசக்தி படத்தின் படப்பிடிப்பிற்காக சிவகார்த்திகேயன் 11ஆம் தேதி இலங்கை சென்றார். 12ஆம் தேதி கொழும்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இங்கு தான் படத்தின் முக்கியமான பகுதிகளின் காட்சிகள் படமாக்க பட்டுள்ளது. இதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் டெல்லி போன்று பிரத்யேகமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை ரயில்நிலையம் போன்று செட் போடுவதற்கு பதிலாக மதுரையிலேயே படப்பிடிப்பு எடுத்திருக்கலாம். ஆனால், போதுமான வசதிகள் மற்றும் அனுமதி போன்ற காரணங்களுக்காக மதுரையில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை என்பதால் செட் அமைத்து படமாக்கி வருகிறார் சுதா கொங்கரா.

இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்; அவரின் முதல் பட ஹீரோ யார் தெரியுமா?
 

55
கொழும்புவில் மதுரை ரயில் நிலையம்

இதனால், கொழும்புவில் மதுரை ரயில் நிலையம் போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் படப்பிடிப்பில் குரு சோமசுந்தரம் தொடர்பான காட்சிகளும் படமாக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சென்னை, சிதம்பரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. பராசக்தி படம் ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories