அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் மூலமாக, சினிமாவில் அறிமுகமானார் சோனா. அஜித் படத்திற்கு பிறகு விஜய் படமான ஷாஜஹான் படத்திலும் நடித்திருந்தார். பின்னர் ஆயுதம், சிவப்பதிகாரம், கேள்விகுறி, மிருகம், குசேலன் என்று ஏராளமான படங்களில் நடித்தார். 2001 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
26
சோனா இயக்கி தயாரித்துள்ள ஸ்மோக்:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் சோனா எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ஸ்மோக். இந்த வெப் சீரிஸை அவரே தயாரித்தும் உள்ளார். அதாவது ஷார்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து யுனிக் புரோடக்ஷன் நிறுவனம் மூலமாக அவரே இந்த வெப் சீரிஸை தயாரித்துள்ளார்.
36
சோனா வாழ்க்கையின் 5 வருட கதை
நடிகை சோனாவின் வாழ்க்கையை மைய்ப்படுத்திய இந்த வெப் சீரிஸ் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸின் புரமோஷனில் பரபரப்பாக இறங்கியுள்ள சோனா, அடுத்தடுத்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
46
என் வாழ்க்கையில் ஏமாற்றங்களே அதிகம்
அப்போது அவரை பற்றி பலருக்கும் தெரியாத பல தகவல்கள் தெரியவந்துள்ளது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றிக்கு கொடுத்த பேட்டியில், என்னுடைய வாழ்க்கையில் நான் ஏமாற்றங்களை தான் அதிகளவில் சந்தித்தேன். எனக்கு அப்போது யாரும் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் யாரையும் நம்புவதாக இல்லை. உனக்காக நான் இருக்கிறேன் என்று சொன்னாலும் கூட அவர்களை நான் நம்பியிருக்க மாட்டேன். அதற்கு முக்கிய காரணம் நான் எல்லோரிடமும் ஏமாந்துவிட்டேன்.
56
என்னை பற்றி நானே சொல்வதற்காகவே இந்த படம்
அப்படி இருக்கும் போது எனக்கு ஆறுதலாக இருந்தது நடிப்பு தான். அதனால் தான் நான் பல படங்களில் கவனம் செலுத்தி நடித்தேன். அதிலேயும் எனக்கு ஒரு சிக்கல் இருந்தது. என்னை எல்லோருமே கவர்ச்சியாக பார்த்தார்கள். இதனால், கவர்ச்சிக்கு என்று வந்த வாய்ப்புகளை நான் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஒரு கட்டத்தில் நடிப்பு மீது இருந்த விரக்தி காரணமாக நான் என்னுடைய வாழ்க்கை பற்றிய விஷயங்களை எடுக்க ஆரம்பித்தேன். கவர்ச்சி கன்னியாக வாழ்ந்த சில்க் ஸ்மிதாவின் மறைவிற்கு பிறகு அவரது வாழ்க்கை வரலாறு என்று பலரும் கூறி வந்தார்கள். ஆனால், உண்மையான கதை பற்றி அப்போது யாருக்குமே தெரியாது. அப்படி தான் நான் இறந்த பிறகும் கூட என்னைப் பற்றி யார் வேண்டுமானாலும் ஆளுக்கொரு கதையை சொல்லக் கூடும். அதனால், தான் என்னுடைய கதையை நானே சொல்லி விட முடிவு செய்துவிட்டேன்.
66
அம்மா சாவில் கூட செல்பி கேட்ட ரசிகர்
அம்மா இறந்த போது அவரை அடக்கம் செய்துவிட்டு வந்த போது ஒருவர் செஃபி எடுக்குறேன் என்ற பெயரில் என்னிடம் வந்து கேட்டார். ஆனால், நான் அம்மா இறந்திருக்காங்க முடியாது என்று கூற உலகத்தில் நடக்காததா இப்போது நடந்திருக்கிறது, ஒரு செல்ஃபி தானே என்றார். நான் கவர்ச்சி நடிகையாக இருந்ததால் தான் அவர் அப்படி பேசினார். அதனால், தான் நான் கவர்ச்சியாக நடிப்பதையே விட்டுவிட்டேன். இப்போது என்னை எல்லோருமே மதித்திறார்கள். குசேலன் படத்தில் வடிவேலு உடன் இணைந்து நடித்தேன். அந்தப் படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து நடிக்க எனக்கு 16 படங்களில் வாய்ப்பு வந்தது. ஆனால், நான் நடிக்கவில்லை.