கடந்த ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான திரைப்படம் தான், 'வேட்டையன்'. என்கவுன்டருக்கு எதிராக எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்க, இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். மேலும் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
25
Jai Bhim Movie Director
'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. 'ஜெயிலர்' படத்துடன் ஒப்பிடும் போது.. 'வேட்டையன்' படம் தோல்வி படமாகவே பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து, இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை நடிப்பதை ரஜினிகாந்த் உறுதி செய்தார்.
அந்த வகையில் தற்போது 'கூலி' திரைப்படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. கிட்ட தட்ட இறுதி கட்டத்தை இந்த படம் எட்டி விட்டதாகவும், கூடிய விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகும் 'கூலி' படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக யாரும் இல்லை என கூறப்படுகிறது.
45
Coolie movie Cast
அதே போல் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.அதன் படி இந்த படத்தில், நாகர்ஜுனா, உப்பேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் ஆகியோர் நடிப்பில் ஒரு பக்கா பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 'கூலி' படத்தின் டீசர் நாளை அதாவது (மார்ச் 14-ஆம் தேதி) லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. (Lokesh fans are expecting) ஆனால் தற்போது வரை இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அப்டேட்டும் வெளியாக வில்லை. ஒரு வேலை நாளைய தினம் 'கூலி' படத்தின் டீசர் வெளியானால் அது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.