கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் விதத்தில் வெளியான படம் தான் முஃபாசா: தி லயன் கிங். கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிகவும் காஸ்டலியா படமாகவும் இது பார்க்கப்பட்டது.
24
200 மில்லியன் டாலர் செலவில் உருவான முஃபாசா :
200 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக மாறியது. தி லயன் கிங் படத்தின் முந்தின கதையின் தொடர்ச்சியாக, இப்போ இரண்டாவது பாகம் உருவானது. இந்த திரைப்படம், திரையரங்கில் ரிலீஸ் ஆகி 2 மாசம் ஆன நிலையில், தற்போது முஃபாசா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
34
ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் முஃபாசா தி லயன் கிங்
அந்தவகையில், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் முஃபாசா தி லயன் கிங் திரைப்படம் மார்ச் 26-ல் இருந்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இங்கிலீஷ், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிலயும் இப்படத்தை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். இந்த படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
44
6093 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்
2024 டிசம்பர் 20-ல் ரிலீஸ் ஆன படம் முஃபாசா: தி லயன் கிங். பாக்ஸ் ஆபீஸ் இதுவரை 700 மில்லியன் டாலர் கலெக்ட் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி, 6093 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. போன வருஷம் ரிலீஸ் ஆன திரைப்படங்களில், முஃபாசா: தி லயன் கிங் திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.