22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா : அலேக்காக 4 விருதுகளை அள்ளிய அமரன் - முழு வின்னர்ஸ் லிஸ்ட்

First Published | Dec 20, 2024, 8:02 AM IST

22nd Chennai International Film Festival : 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற படங்கள் என்னென்ன என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம்.

22nd Chennai International Film Festival

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 12ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழா டிசம்பர் 19-ந் தேதி உடன் நிறைவு பெற்றது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை உள்பட மொத்தம் 26 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த விருதுகளை வென்றவர்கள் யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sai Pallavi won best actress award

சிறந்த படம்

சிறந்த படமாக அமரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் மகேந்திரன் ஆகிய இருவருக்கும் விருது உள்பட தலா 1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

2வது சிறந்த படம்

இரண்டாவது சிறந்த படத்துக்கான விருதை லப்பர் பந்து திரைப்படம் வென்றது. இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து மற்றும் தயாரிப்பாளர் லட்சுமணன் ஆகியோருக்கு விருது மற்றும் தலா 50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

ஸ்பெஷல் ஜூரி விருது

சிறந்த படத்துக்கான ஸ்பெஷல் ஜூரி விருது ஜமா படத்துக்கு வழங்கப்பட்டது. அப்படத்தை இயக்கிய இயக்குனர் பரி இளவழகனுக்கு விருது மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டார்.

சிறந்த பொழுதுபோக்கு படம்

சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய்யின் கோட் படத்தை கழற்றிவிட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழா – பிளானோடு வந்த அமரன்!

Tap to resize

Aravind Swami Favourite Actor Award

சிறந்த நடிகர்

சிறந்த நடிகருக்கான விருது மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. மகாராஜா படத்துக்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை சிறந்த நடிகைக்கான விருது அமரன் படத்தில் இந்து ரெபேகா வர்கீஸாக நடித்த நடிகை சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது.

பேவரைட் நடிகர்

பேவரைட் நடிகருக்கான விருது அரவிந்த் சாமிக்கு வழங்கப்பட்டு உள்ளது. மெய்யழகன் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

பேவரைட் நடிகை

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பேவரைட் நடிகைக்கான விருது கொட்டுக்காளி படத்தின் நாயகி அன்னா பென்னுக்கு கிடைத்துள்ளது.

22nd Chennai International Film Festival Full Winner List

சிறந்த ஒளிப்பதிவாளர் - சாய் (அமரன்)

சிறந்த படத்தொகுப்பாளர் - பிலோமின் ராஜ் (மகாராஜா)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் (வாழை)

சிறந்த குணச்சித்திர நடிகர் - அட்டகத்தி தினேஷ் (லப்பர் பந்து)

சிறந்த குணச்சித்திர நடிகை - துஷாரா விஜயன் (வேட்டையன்)

சிறந்த எழுத்தாளர் - நிதிலன் சுவாமிநாதன் (மகாராஜா)

சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ் குமார் (அமரன்)

சிறந்த கலை இயக்குனர்  - எஸ்.எஸ்.மூர்த்தி (தங்கலான்)

சிறந்த சமூக படம் - நந்தன் 

ஸ்பெஷல் ஜூரி விருது - மாரி செல்வராஜ் (வாழை)

ஸ்பெஷல் ஜூரி விருது - பா.இரஞ்சித் (தங்கலான்)

ஸ்பெஷல் ஜூரி விருது - சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லதுரை)

ஸ்பெஷல் ஜூரி விருது - யோகிபாபு (போட்)

அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது - அருள்நிதி

சிறந்த குறும்படம் - கயமை

நம்பிக்கை நட்சத்திரம் விருது - அர்ஜுன் தாஸ் (ரசவாதி)

இதையும் படியுங்கள்... சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தும் கியூபா திரைப்பட விழா - திரையிடப்படும் சிறந்த படங்கள்!

Latest Videos

click me!