Flop Movies in Tamil Cinema
2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சோதனை காலம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஒரே ஒரு ஹிட் படத்தை மட்டுமே கொடுத்தது கோலிவுட். அதன்பின்னர் எஞ்சியுள்ள ஆறு மாதங்களில் தான் வரிசையாக வெற்றிப்படங்கள் ரிலீஸ் ஆகி ஓரளவு ஆறுதல் கொடுத்தன. இந்த நிலையில், 2024-ம் ஆண்டு முடிவடையும் தருவாயில், இந்த ஆண்டு தமிழ் சினிமா எந்த அளவு நஷ்டத்தை சந்தித்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
17 Hit Movies in 2024
அதன்படி இந்த ஆண்டு தமிழில் மொத்தம் 241 திரைப்படங்கள் வந்துள்ளன. இதில் 223 படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. எஞ்சியுள்ள 18 படங்கள் மட்டுமே லாபம் சம்பாதித்து அதை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல வசூல் ஈட்டி கொடுத்துள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த 241 படங்களில் 186 படங்கள் சின்ன பட்ஜெட் படங்களாகும். சிறு பட்ஜெட் படங்கள் ரூ.2 முதல் ரூ.5 கோடி செல்வில் எடுக்கப்பட்டு உள்ளதால், அந்த படங்களுக்கு மட்டும் சுமார் ரூ.400 கோடி செல்வாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... பைரி முதல் ஜமா வரை; 2024-ல் ரசிகர்கள் கொண்டாட தவறிய தரமான தமிழ் படங்கள் ஒரு பார்வை
7 percent Movies only hit in Kollywood
அதே நேரத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் ரூ.50 முதல் ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளன. அதில் விஜய் நடித்த தி கோட், சிவகார்த்திகேயனின் அமரன், தனுஷின் ராயன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதர பெரிய பட்ஜெட் படங்களான ரஜினியின் வேட்டையன், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4, விஜய் சேதுபதியின் மகாராஜா, கார்த்தி நடித்த மெய்யழகன் ஆகியவையும் வெற்றிப்பட்டியலில் இணைந்துள்ளன.
Small Budget Movies
சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களான வாழை, டிமாண்டி காலனி 2, பிளாக், பிடி சார், கருடன், லப்பர் பந்து, லவ்வர் ஆகிய படங்கள் வசூலில் பெரிய பட்ஜெட் படங்களுக்கே டஃப் கொடுத்து ஆச்சர்யப்படுத்தின. இந்த ஆண்டு வெளியான படங்களில் 93 சதவீத படங்கள் தோல்வியை தான் சந்தித்து உள்ளன. எஞ்சியுள்ள 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளன. இதனால் தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் மட்டும் ரூ.1000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே ராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Tamil Cinema Loss in 2024
தரமான மற்றும் கவனம் ஈர்க்கும் படங்கள் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு அதிக வெற்றிப்படங்களை கொடுத்த திரையுலகமாக மலையாள சினிமா இருந்தாலும், அங்கும் 700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பது பலரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இத்தனைக்கும் தமிழ் சினிமாவை விட மலையாள சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... புத்தாண்டுக்கு இத்தனை புதுப் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகிறதா? முழு லிஸ்ட் இதோ