பைரி முதல் ஜமா வரை; 2024-ல் ரசிகர்கள் கொண்டாட தவறிய தரமான தமிழ் படங்கள் ஒரு பார்வை

First Published | Dec 31, 2024, 11:28 AM IST

2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட தவறிய தரமான படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Jama

ஜமா

பெண் வேடமிட்டு நாடமாடக்கூடிய ஒரு நாடகக் கலைஞர்களுடைய வலி நிறைந்த வாழ்க்கையை மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் காட்டிய படம் தான் ஜமா. இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

Byri

பைரி

2024-ல் இப்படி ஒரு படம் வந்ததே பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் செம விறுவிறுப்பான படம் இது. புறா பந்தயத்தை மையமாக வைத்து எடுத்து எந்த இடத்திலும் போர் அடிக்காமல் இருக்கும் படம் தான் பைரி. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

Tap to resize

Nandhan

நந்தன்

சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நந்தன் திரைப்படத்தை இரா சரவணன் இயக்கி இருந்தார். அடித்தட்டு மக்கள் ஒரு அடிப்படை உரிமைகளைக் கூட எவ்வளவு போராடி வாங்க வேண்டி இருக்கிறது என்பதை சொன்ன அருமையான படம் இது. இப்படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

Sattam En Kaiyil

சட்டம் என் கையில்

சதீஷ் நாயகனாக நடித்த படம் சட்டம் என் கையில். கடைசி வரை சஸ்பென்ஸாக செல்லும் சிறந்த கிரைம் த்ரில்லர் படம் இது. இப்படமும் அமேசான் பிரைமில் உள்ளது. மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... புத்தாண்டுக்கு இத்தனை புதுப் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகிறதா? முழு லிஸ்ட் இதோ

pogumidam vegu thooramillai

போகுமிடம் வெகுதூரமில்லை

விமல் மற்றும் கருணாஸ் இணைந்து பயணிக்கும் போது அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தான் கதை. இப்படத்தின் கிளைமாக்ஸ் மனதை வருட வைக்கும் வகையில் இருக்கும். இப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் உள்ளது.

Hot Spot

ஹாட் ஸ்பாட்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ஏ சான்றிதழ் பெற்ற படம் தான் ஹாட் ஸ்பாட். இதில் 4 கதைகளை சொல்லி இருப்பார். நம்முள் நிறைய விஷயங்களை யோசிக்க வைக்கும் படமாகவும் இது இருக்கும். இப்படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

J Baby

ஜே பேபி

அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் உருவான படம் ஜே பேபி. பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த அழகான எமோஷனல் டிராமா தான் இந்தப் படம். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. 

Minmini

மின்மினி

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மின்மினி. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் முதல் பாதி எடுத்து முடித்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதன் இரண்டாம் பாதியை எடுத்தனர். மிகவும் அழகான காட்சிகளுடன் கூட ஃபீல் குட் படம் தான் இந்த மின்மினி. 

Latest Videos

click me!