VJ Chitra Father Suicide
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி சித்ராவின் உடல் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நசரத்பேட்டை போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
VJ Chitra
சுமார் 3 மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஹேம்நாத், இந்த வழக்கில் நிரபராதி என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வந்தது. அவரை விடுதலை செய்யவும் திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹேம்நாத் விடுதலை ஆன நிலையில், அதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சின்னத்திரை சீரியல் நடிகை விஜே சித்ராவின் தற்கொலை வழக்கு! ஹேம்நாத் உட்பட 7 பேரை விடுதலை செய்தது நீதிமன்றம்!
Vijay TV Actress VJ Chitra
மகளின் மரணத்தால் மன உளைச்சலில் இருந்து வந்த காமராஜ் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் தன் மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே அவர் தூக்கு போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். மகள் இறந்த நான்கு ஆண்டுகளில் தந்தையும் அதேபோல் மரணமடைந்திருப்பது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.