சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்து ஆரம்பத்தில் புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என பல்வேறு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது தென்மேற்கு பருவக்காற்று தான். சீனு ராமசாமி இயக்கிய இப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.
26
Makkal Selvan Vijay Sethupathi
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக உருவெடுத்தார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்த விஜய் சேதுபதிக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்தன.
36
Bigg Boss Vijay sethupathi
குறிப்பாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக களமிறங்கினார். கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ.60 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கே விஜய் சேதுபதிக்கு ரூ.30 கோடி தான் சம்பளமாக வழங்கப்படும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அதைவிட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி இருக்கிறார் மக்கள் செல்வன்.
56
vijay sethupathi Net Worth
விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது வரை அவர் 50 படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி ரூ.140 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறாராம். இவருக்கு சென்னையில் சொந்தமாக ரூ.50 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா உள்ளது.
66
Vijay Sethupathi Car Collection
அதுமட்டுமின்றி தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறாராம் விஜய் சேதுபதி. சென்னையில் கீழ்பாக்கம், என்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமாக 100 ஏக்கருக்கு மேல் இடங்கள் உள்ளதாம். அதேபோல் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்ட விஜய் சேதுபதியிடம் மினி கூப்பர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், இனோவா, பென்ஸ் போன்ற சொகுசு கார்களும் உள்ளன.