Published : Dec 31, 2024, 12:27 PM ISTUpdated : Dec 31, 2024, 12:35 PM IST
வருண் தவான் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான, பேபி ஜான் படத்தில் என்னை சிபாரிசு செய்தது, பிரபல முன்னணி நடிகை தான் என்கிற சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான 'மைதான்' படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது. இதற்கான ஆடிஷனில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட நிலையில், அவர் மிகவும் உடல் எடையை குறைத்தால் அஜய் தேவ்கனுக்கு பொருத்தமாக இல்லை என கூறி இந்த வாய்ப்பு பறிபோனது. இதை தொடர்ந்து மும்பைக்கு பறந்த கையேடு சென்னைக்கு வந்த கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல, தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.
25
Atlee Produced Baby John Movie
இந்நிலையில், இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளராக களமிறங்கிய, 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியான நிலையில், இந்த படத்தை பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு தகுந்தாப்போல் இயக்குனர் காளீஷ் இயக்கி இருந்தார்.
தளபதி விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'தெறி' படத்தின் ரீமேக் பாலிவுட் ரசிகர்களையும் கவருமா? என்கிற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியானது. முதல் நாளே ரூ.11 கோடி வசூல் செய்த நிலையில், அடுத்தடுத்து வசூலில் சரிவை சந்திக்க துவங்கியது. இதுவரை சுமார் 30 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், போட்ட பணத்தை கூட அட்லீ திரும்ப எடுக்க முடியாமல் தோல்வியை தழுவி உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
45
Samantha Recommended Keerthy suresh
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில்... 'பேபி' ஜான் திரைப்படத்தில் நடிக்க தனக்கு சிபாரிசு செய்த டாப் நடிகை யார் என்பதை ரிவீல் செய்துள்ளார். கலாட்டா இந்தியா உடனான சமீபத்திய பேட்டியின் போது, கீர்த்தி சுரேஷ் , 'பேபி ஜான்' படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னவர் சமந்தா ரூத் பிரபு தான். என்னால் அந்த கதாபாத்திரத்தை திறம்பட நடிக்க முடியும் என அவர் நம்பியதற்கு என் நன்றிகள் என கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு 'பேபி ஜான்' சிறந்த தொடக்கமாக இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில், இந்த படத்தின் தோல்வி யாரும் சற்றும் எதிர்பாராதது எனலாம்.
ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இருவரும் 'மகாநடி' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில்சமந்தா மிக முக்கிய வேடத்தை ஏற்று நடித்தார். நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா மற்றும் பானுப்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் கீர்த்தி தனது சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இந்த படத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.