2021 Comedy Actors Death: தீராத சோகம்..! 2021 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகம் இழந்த 6 காமெடி நடிகர்கள் பட்டியல் இதோ

Published : Dec 22, 2021, 03:30 PM IST

ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், குணச்சித்திர நடிகர்கள், ஆடல், பாடல் என எத்தனை அம்சங்கள் இருந்தாலும் காமெடிக்கும், காமெடி காட்சியில் நடிக்கும் நடிகர்களுக்கும் தனி இடம் உண்டு. அப்படி இந்த வருடம் மட்டும் தமிழ் சினிமா இழந்த காமெடி நடிகர்கள் யார் யார்? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.  

PREV
16
2021 Comedy Actors Death: தீராத சோகம்..! 2021 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகம் இழந்த 6 காமெடி நடிகர்கள் பட்டியல் இதோ

தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடி மூலம் கருத்துக்களை விதைத்த நடிகர் விவேக் (Vivek) கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு (Heart Attack) காரணமாக மரணமடைந்தார். இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அதற்கான உரிய சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவர் வாழும் காலங்களில் நட்டு வைத்து சென்ற மரக்கன்றுகள் தற்போது வரை அவரது பெயரை காற்றாக கக்கிக்கொண்டு தான் உள்ளது.

 

26

விவேக் மரணத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகை உலுக்கிய அடுத்த மரணம் என்றால் அது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த பாண்டு கொரோனா தொற்றால் பலியான சம்பவம் தான். இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமாகி, ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

36

திரைப்படங்கள் மற்றும் பல சீரியல்களில் நெல்லை தமிழில் பேசி ரசிகர்களின் மனதை கவர்ந்த காமெடி நடிகர் நெல்லை சிவா இந்த வரும் மே மாதம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். வடிவேலு உடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி எல்லாம் பெரிய ஹிட். வைகைப் புயல் வடிவேலுவுடன் நெல்லை சிவா சேர்ந்து நடித்த "கிணத்தை காணோம்" மிகவும் பிரபலமானது என்பது குறிபிடித்தக்கது.

 

46

ரேனிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா-2,நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன். ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தாலும், கொரோனாவாலும் அவரது வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வாழ்ந்து வந்த இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

56

கொரோனா தொற்று பல பிரபலங்களின் உயிரை பறித்த நிலையில், தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக, காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகர் மாறனையும் விட்டுவைக்க வில்லை. கொரோனா தொற்றுக்கு மிகவும் தாமதமாக சிகிச்சை எடுத்து கொண்டதால், 'மாறன்' உயிரிழந்தார்.

 

66

சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியவரும், காமெடி நடிகருமான காளிதாஸ் உடல்நல குறைவு காரணமாக ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இவர் நடிகர் வடிவேலுவுடன் பல காமெடி காட்சியில் நடித்து, ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். பார்ப்பதற்கு நன்கு உயரமாகவும் வில்லன் நடிகர் போல் தோற்றமளித்தாலும் உண்மையில் சினிமா வட்டாரத்தில் தங்கமான குணம் கொண்டவர் என பெயரெடுத்தவர். இவரது இழப்பும் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்தது.

 

Read more Photos on
click me!

Recommended Stories