Devayani: 47 வயதில் செம்ம ஸ்டைலிஷாக பேன்ட் - ஷர்ட்டில் தோன்றி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தேவயானி!

Published : Dec 22, 2021, 01:27 PM IST

அஜித் - விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும், திருமணத்திற்கு பின்னர் மாடர்ன் உடைகளை தவிர்த்து சேலையில் மட்டுமே தரிசனம் கொடுத்த நடிகை தேவயானி, செம்ம ஸ்டைலிஷாக பேன்ட் - ஷர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
19
Devayani: 47 வயதில் செம்ம ஸ்டைலிஷாக பேன்ட் - ஷர்ட்டில் தோன்றி இளம் நடிகைகளுக்கு  டஃப் கொடுக்கும் தேவயானி!

நடிகை தேவயானி மும்பையை பூர்வீகமாக் கொண்டவர் என்றாலும், அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது தமிழில் சினிமா தான். 

 
29

பார்க்கவே பக்கத்துக்கு வீட்டு பெண் போல் தோன்றும் எதார்த்தமான அழகு, இவரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஹீரோயினாக மாற்றியது. காதல் கோட்டை, சூர்யவம்வம், நீ வருவாய் என என்று, 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 
39

வெள்ளித்திரையில் இருந்து திருமணம் ஆகி விலகிய பின்னர், சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.  குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சின்னத்திரை சித்திரம் போல் மனதை விட்டு நீங்காத ஒன்று.

 
49

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ சீரியலில் நடித்திருந்தார். பின்னர் அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார் தேவயானி.

 
 
59

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'புது புது அர்த்தங்கள்' என்கிற தொடரில் நாயகியாக நடிக்க உள்ளார். 

 
69

ஒரு தாயாக சாதிக்க துடிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் கோலங்கள் சீரியலில் நடித்த நடிகர் அபிஷேக் சுமார் 15 வருடங்களுக்குப் பின் மீண்டும் தேவயாணியோடு இணைந்து நடித்து வருகிறார்.

 

79

சீரியலில் நடித்த நேரம் போக, தன்னுடைய இரண்டு மகள்களுக்காகவும், குடும்பத்துக்காகவும் அதிக நேரம் செலவிடும் சிறந்த குடும்பத்தலைவியாகவும் உள்ளார்.

 

89

தன்னுடைய சீரியல்களிலும் சரி, நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த போதிலும் சரி... தனக்கு ஏற்ற அழகிய ஹோம்லி லுக்கில் மற்றும் தோன்றிய தேவயானி தற்போது செம்ம ஸ்டைலிஷாக பேன்ட் ஷர்ட்டில் தோன்றியுள்ளார்.

 

99

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பேன்ட் ஷர்ட்டில் இவர் கொடுத்துள்ள போஸில்... இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பது போல் உள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories