Published : Dec 22, 2021, 12:37 PM ISTUpdated : Dec 22, 2021, 12:38 PM IST
நடிகர் கார்த்தி (Karthi) - அதிதி ஷங்கர் (Adhiti Shankar) நடிப்பில் உருவாகி வரும், 'விருமன்' (Viruman) படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக, கலர் ஃபுல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு!
'கொம்பன்', 'மருது' போன்ற படங்களை கிராமத்து மனம் கமழும் கதைகளை இயக்கி வரும் இயக்குனர் முத்தையா தற்போது நடிகர் கார்த்தியை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'விருமன்'.
26
இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் பிரமாண்டங்களை கண் முன் நிறுத்திவரும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
36
அதிதி ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படமான 'விருமன்' படத்தை, தொடர்ந்து பல தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.
46
இப்படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார் அதிதி. தேன்மொழியாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
56
இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் சூர்யா படக்குழுவினரின் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
66
மேலும் இந்த தகவலுடன் அதிதி ஷங்கர் பாவாடை தாவணியில்... கார்த்தியின் நெஞ்சு மீது கை வைத்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் அதிகமாக பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.