dhanush
அசுரத்தனமான நடிப்பை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருபவர் தனுஷ். இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில், 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்,
dhanush
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
dhanush
நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முழு நீள பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெறுகிறார்.
dhanush
தனுஷ் தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்திற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
dhanush
கொரோனா இரண்டாவது அலை தலை தூக்குவதற்கு முன்னரே, கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா பறந்தார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
dhanush
பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் எங்கு சென்றாலும் வேட்டி அணிந்தே செல்வார். பராம்பரிய உடையில் தனுஷ் இருப்பது அனைவரையும் கவர்ந்திழுத்து வந்தது.
dhanush
பாலிவுட் படமான கலாட்டா கல்யாணம் ( Atrangi Re) படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக தனுஷ் நடித்துள்ளார்.
dhanush
Atrangi Re படத்தில் அஜய்குமார், சாரா அலிகான் நடித்துள்ளனர். disney+ hotstar ஓடிடி தளத்தில் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக 'Little Little' என்கிற பாடலை தனுஷ் பாடியுள்ளார்.
dhanush
Atrangi Re படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட தனுஷ் கோட் சூட் அணிந்து டிப்டாப்பாக வளம் வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.