Vegetable Price: குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி.! அள்ளிகிட்டு போகும் இல்லத்தரசிகள்.! இனி தினமும் தக்காளி தொக்குதான்.!

Published : Nov 15, 2025, 08:20 AM IST

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கணிசமாகக் குறைந்துள்ளது. பெரும்பாலான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைத்தாலும், சின்ன வெங்காயம், நெல்லிக்காய், பூண்டு போன்றவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. 

PREV
15
இனி வீட்டுல தக்காளி தொக்கு, வெங்காய ஊறுகாய்

தங்கம் விலை தாறமாறாக ஏறி வரும் நிலையில், வெங்காயம் தக்காளி விலை பொதுமக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கம்மியான விலையில் கிடைக்கின்றன. இதனால் அவற்றை மொத்தமாக வாங்கி செல்லும் பொதுமக்கள், எதிர்கால தேவைக்காக தொக்கு மற்றும் ஊறுகாய் போட்டு வைத்துக்கொள்கின்றனர். சரி வாங்க இன்னைக்கு என்ன விலை விக்கிதுன்னு பார்ப்போம்.

25
1 கிலோ பெரிய வெங்காயம் ரூ.7

1 கிலோ பெரிய வெங்காயம் ரூ.7 முதல் ரூ.15 வரை கிடைப்பதால் பொதுமக்கள் பைகளில் அள்ளி செல்கின்றனர். அதேபோல் 1 கிலோ தக்காளி 17 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.70 வரை உயர்ந்த விலையில் விற்பனையாகுகிறது. 

பச்சை மிளகாய், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்றவை ரூ.15 முதல் ரூ.37 வரை உள்ள விலையில் கிடைக்கின்றன. ஆரோக்கியத்திற்கு சிறந்த நெல்லிக்காய் மட்டும் கிலோவுக்கு ரூ.230 முதல் 290 என அதிக விலையில் உள்ளது. குடைமிளகாய், வாழைப்பூ, சிறிய மக்காச்சோளம் போன்றவை ரூ.6 முதல் 60 வரையிலான மலிவான விலையில் கிடைக்கின்றன.

35
சுரைக்காய், பாகற்காய், அவரைக்காய் கிலோ ரூ.25

சுரைக்காய், பாகற்காய், அவரைக்காய் போன்றவை ரூ.25 முதல் ரூ.130 வரை மாறுபட்ட விலையில் விற்கப்படுகின்றன. மலை காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேரட் ஆகியவை ரூ.10 முதல் 60 ரூபாய் வரை கிடைக்கின்றன. முருங்கைக்காய் ரூ.40–90, கத்திரிக்காய் ரூ.15–85 என வகைக்கு ஏற்ப விலை மாறுகிறது. 

45
10 ரூபாய்க்கு வெள்ளரிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு

வெள்ளரிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு போன்றவை ரூ.10–30 என மலிவான விலையில் கிடைக்கின்றன. ஆனால் பூண்டு விலை அதிகமாக உள்ளது. பெரிய பூண்டு கிலோவுக்கு ரூ.350 முதல் 520 வரையும் சிறிய பூண்டு ரூ.100 முதல் 120 வரையும் விற்பனையாகிறது. டபுள் பீன்ஸ் ரூ.150 முதல் 180 வரையும் சேப்பங்கிழங்கு ரூ.40 முதல் 60 வரையும் மரவள்ளிக் கிழங்கு ரூ.40 முதல் 60 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

55
நியாயமான விலையில் பெரும்பாலான காய்கறிகள்

மொத்தத்தில், கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. சில காய்கறிகள் மட்டும் தேவை-வரத்து மாற்றத்தால் உயர்ந்த விலையிலேயே உள்ளன. இதனால் குடும்ப செலவுக்குள் பொருத்தமான காய்கறிகளைத் தேர்வு செய்தால் செலவை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories