College students: கல்வி உதவி தொகை ரூ.25 ஆயிரம் .! கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?!

Published : Nov 15, 2025, 07:39 AM IST

தமிழக அரசு 'தமிழ்நாடு தொல்குடியினர் ஆய்வு உதவித்தொகை திட்டத்தை' (TNFTR) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினர் குறித்து ஆய்வு செய்யும் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

PREV
13
ஆய்வு செய்தால் மாதம் ரூ.25,000

தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் ஆய்வுத் துறையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக 2024ஆம் ஆண்டு அறிமுகமான ‘தமிழ்நாடு தொல்குடியினர் ஆய்வு உதவித்தொகை திட்டம் (Tamil Nadu Fellowship for Tribal Research – TNFTR)’ சிறப்பு கவனத்தை பெறுகிறது. இத்திட்டம் மூலம் பழங்குடியினரின் வரலாறு, வாழ்க்கை முறை, பண்பாடு, உரிமைகள் போன்ற துறைகளில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்படுகிறது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேற்கொள்ளும் இந்த திட்டத்தில், பழங்குடியினர் தொடர்பான ஆய்வுத்துறையை விரிவுபடுத்தும் நோக்கில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் 70 மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

23
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
  • நடப்பு கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் அல்லது முனைவர் மேலாய்வு படித்துவரும் மாணவர்கள்.
  • UG மற்றும் PG மாணவர்கள் – 6 மாத ஆய்வு
  • Ph.D மற்றும் Post-Doctoral Scholars – 3 வருட ஆய்வு
  • UG மற்றும் PG மாணவர்களில் 25 பேர், Ph.D மற்றும் மேலாய்வாளர் பிரிவில் 45 பேருக்கு முன்னுரிமை.

உதவித் தொகை விவரங்கள்

UG / PG மாணவர்கள்: மாதம் ரூ.10,000

Ph.D / Post-Doctoral Scholars: மாதம் ரூ.25,000

ஆய்வுக்காலம் முழுவதும் இந்த தொகை வழங்கப்படும்.

33
தகுதி நிபந்தனைகள், எப்படி விண்ணப்பிப்பது?
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • பழங்குடியினரைப் பற்றி ஆய்வு செய்யத் திட்டமிட்டிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

அதிகாரப்பூர்வ இணையதளம்: Fellowship.tntwd.org.in

இணையதளத்தில் உள்ள வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து படித்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப பதிவு நவம்பர் 12 முதல் தொடங்கியுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 12.

பழங்குடியினர் சமூகத்தின் பண்பாடு, வரலாறு மற்றும் உரிமைகளைப் பற்றிய ஆழமான ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. கல்வியையும், ஆய்வையும் இணைக்கும் இந்த உதவித் தொகை பலருக்கு பயனளிக்கக்கூடியது. மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனடியாக விண்ணப்பிக்கலாம்!

Read more Photos on
click me!

Recommended Stories