Job Alert: தமிழ் தெரிந்தவர்களுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.! எழுத்து தேர்வு கிடையாது.! நேர்காணல் மட்டும்தான்.!

Published : Nov 15, 2025, 06:56 AM IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  31 காலிப்பணியிடங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. தகுதியான இந்து மதத்தை் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு இன்றி, நேர்காணல் மூலம் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். 

PREV
14
அமைதியான பணிச்சூழலில் வேலை வேண்டுமா?

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் கீழ் செயல்படும் உபகோயில்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 31 பணியிடங்களுக்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு இல்லை என்பதால், கல்வித் தகுதி உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

24
காலிப்பணியிடங்கள் & தகுதிகள்

அறநிலையத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், பல்வேறு பணியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய பணிகள்:

  • இளநிலை உதவியாளர் (Junior Assistant)

காலிப்பணியிடம்: 10

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி

சம்பளம்: ரூ.18,500 – ரூ.58,600

கூர்க்கா (Gurkha) / பாதுகாப்பு பணியாளர்கள்

கல்வித் தகுதி: குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400

 திருவலகு, கால்நடை பராமரிப்பாளர், சுத்தம் செய்யும் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணிகள்

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

முக்கிய நிபந்தனை: தமிழ் நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

34
வயது வரம்பு & தளர்வு

குறைந்தபட்ச வயது: 18

அதிகபட்ச வயது: 45

அரசு விதிகளின்படி ஒதுக்கீட்டின்படி வயது தளர்வும் வழங்கப்படும்.

தேர்வு முறை – எழுத்துத் தேர்வு இல்லை

இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு எதுவும் இல்லை. தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதனால், கல்வித் தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் சரியாக இருந்தால், இந்த வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கும்.

44
விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் srirangamranganathar.hrce.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேவையான அனைத்து சான்றிதழ்களுடனும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025

இந்த வேலைவாய்ப்பின் சிறப்பும்சங்கள்

  • அரசுத் துறைக்குச் சமமான நிலையான பணியிடம்
  • உயர்ந்த சம்பள அமைப்பு
  • எழுத்துத் தேர்வு இல்லாததால் எளிய தேர்வு நடைமுறை
  • தமிழறிவு இருக்க வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை நிபந்தனை
  • சமயம் சார்ந்த (HRCE) துறையில் மரியாதைக்குரிய வேலை வாய்ப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் போன்ற பெருமைமிக்க தெய்வஸ்தானத்தில் வேலை செய்யும் வாய்ப்பு மிக சிலருக்கே கிடைக்கும். தேவையான கல்வித் தகுதி உடைய தமிழில் நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல்ச் செய்வது நல்லது. மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories