
தங்கம் என்பது பல நூறு ஆண்டுகளாகவே பாதுகாப்பான மற்றும் விருப்பமான முதலீடாக கருதப்படுகிறது. இன்றும் கூட தங்கத்தில் முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர். தங்கம் ஒரு உறுதியான சொத்தாக இருப்பதால், அதன் மதிப்பின் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.
பல தசாப்தங்களாக உலக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியர்களை தங்கம் வாங்க தூண்டுவது எது? முதலீடு மற்றும் செல்வத்தை உருவாக்கும் கருவியாக செயல்படுவதை தாண்டி, தங்கம் குறிப்பிடத்தக்க கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக திருமணங்களில் தங்க நகைகள் அவசியமான சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி போன்ற சிறப்புப் பண்டிகைகளிலும் தங்கம் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுவாக பண்டிகைக் காலங்களில் தங்கத்தின் விலை உயரும். தங்கத்தின் விலை உலகளவில் மாறுபடும், நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்தியாவை விட மலவான விலையில் தங்கம் விற்பனை செய்யப்படும் சில நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தோனேசியா
இந்தோனேசியா ஒரு கிழக்கு ஆசிய நாடாகும். உலகிலேயே மலிவான விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தோனேசியா நாட்டின் பணத்தின் படி, அங்கு 4 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,330,266 என்ற விலைக்கு கிடைக்கிறது. 10 கிராமுக்கு ரூ.71,880 ஆகும். இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.77,700 ஆக இருந்தது. இதனால் இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே 10 கிராம் தங்கத்தில் ரூ.5,820 விலை வித்தியாசம் உள்ளது.
தங்கத்தை வாங்க இது சரியான நேரமா? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த டைம்!
மலாவி
மலாவி ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நாடு. அந்த நாட்டில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,482,660.70 MWK (மலாவியன் குவாச்சா) ஆக இருந்தது, அதாவது 10 கிராமுக்கு ரூ.72,030. இந்தியாவின் இன்றைய 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.77,700-க்கு ஒப்பிடும்போது, 10 கிராமுக்கு ரூ.5,670 வித்தியாசம் உள்ளது.
ஹாங்காங்
ஹாங்காங் சீன மக்கள் குடியரசின் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி. இந்த நாட்டில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு HKD 665 அல்லது 10 கிராமுக்கு ரூ.72,050 ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை இந்தியாவில் தற்போது 10 கிராமுக்கு ரூ.77,700 ஆக இருக்கும் நிலையில், 10 கிராமுக்கு ரூ.5,650 விலை வித்தியாசம் உள்ளது.
கம்போடியா
கம்போடியாவில் தரமான தங்கத்திற்கு பெயர் பெற்ற நாடாகும். இந்த நாட்டில் 24 காரட் தங்கத்தின் விலை இந்தியாவை விட மிகவும் குறைவு. அக்டோபர் 12 அன்று, கம்போடியாவில் தங்கத்தின் விலை 347,378.43 KHR (கம்போடியன் ரியல்) அல்லது 10 கிராமுக்கு ரூ.72,060 ஆக இருந்தது.
துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் துபாய் ஒன்றாகும். அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல்-குவைன், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகியவை மற்ற 6 எமிரேட்ஸ். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மற்ற மற்ற நாடுகளை விட ஒப்பிடும்போது துபாயில் தங்கம் விலை மலிவாக உள்ளது. மேலும் துபாயின் தங்கத்தின் மீதான வரியும் குறைவாக உள்ளது. இதனால் தரமான தங்கம் வாங்குவதற்கு துபாய் பாதுகாப்பான நாடாக கருதப்படுகிறது.
2025ல் தங்கத்தின் விலை இவ்வளவு உயருமா!எவ்வளவு தெரியுமா? உடனே வாங்கி போடுங்க
அக்டோபர் 12, 2024 அன்று, துபாயில் 24 காரட் தூய்மையான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு AED 3180.25 (சுமார் ரூ. 72,840) என விற்கப்பட்டது.. இந்தியாவில் உள்ள 24 காரட் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில், 10 கிராமுக்கு ரூ.4,860 விலை வித்தியாசம் உள்ளது.
இதன் மூலம் இந்தோனேஷியா, மலாவி, ஹாங்காங், கம்போடியா மற்றும் துபாய் போன்ற நாடுகள் இந்தியாவை விட மலிவான விலையில் தங்கத்தை வழங்குகின்றன.