SIP Calculator: மாதம் 2000, 3000, 5000; இப்படி முதலீடு செய்தால் ஈசியா ரூ.1 கோடி கிடைக்கும்!

First Published | Oct 17, 2024, 9:00 AM IST

மாதம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை SIP முதலீடு மூலம் 12% வருடாந்திர வருமானம் மற்றும் 10% கூடுதல் முதலீடு ஆகியவற்றின் உதவியுடன் ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

SIP investment for Rs 1 Crore corpus

SIP முறையில் மாதம் 1000, 2000, 3000 மற்றும் 5000 ரூபாய் முதலீடு செய்து, 12% வருடாந்திர வருமானம் மற்றும் 10% கூடுதல் முதலீட்டை வைத்துக் கொண்டு, ஒரு கோடி ரூபாய் சேர்க்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைக் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

Rs. 1000 monthly SIP investment

31 ஆண்டுகளுக்கு சராசரியாக 12% ஆண்டு வருமானத்துடன் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதலீடு செய்தால், தோராயமாக ரூ.1.02 கோடி சேரும். இதில், நீங்கள் முதலீடு செய்த தொகை சுமார் 21.82 லட்சமாக இருக்கும். அதே சமயம் வட்டி வருமானம் சுமார் 80 லட்சமாக இருக்கும். இந்தக் கணக்கீட்டில் ஒவ்வொரு ஆண்டும் SIP முதலீட்டுத் தொகையை 10% அதிகரிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Tap to resize

Rs. 2000 monthly SIP investment

27 ஆண்டுகளுக்கு சராசரியாக 12% வருடாந்திர வருவாய் விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.2000 முதலீடு செய்தால், தோராயமாக ரூ.1.14 கோடி கிடைக்கும். முதலீடு செய்த மொத்த தொகை சுமார் ரூ.29 லட்சமாக இருக்கும். பெறப்பட்ட வட்டி ரூ.86 லட்சமாக இருக்கும். இதிலும் ஆண்டுக்கு 10% முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

Rs. 3000 monthly SIP investment

மாதத்திற்கு ரூ.3000 வீதம் முதலீடு செய்தால் 24 ஆண்டுகளில் ஒரு கோடியாக மாறும். இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகமாக முதலீடு செய்வதும் அவசியம். இந்தக் கணக்கீட்டில் மொத்த முதலீடு ரூ. 31.86 லட்சமாகவும் வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.78.61 லட்சமாகவும் இருக்கும். இரண்டும் சேர்ந்து ரூ.1.10 கோடி வரும்.

Rs. 5000 monthly SIP investment

ஒப்பீட்டளவில், விரைவாக ஒரு கோடி ரூபாய் சேர்க்க, ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்யலாம். சராசரியாக 12% வருடாந்திர வருவாய் விகிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10% முதலீடு உயர்ந்தால் 21 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.16 கோடி கிடைத்துவிடும். முதலீடு செய்த மொத்தத் தொகை சுமார் ரூ.38.40 லட்சமாக இருக்கும். வட்டியாகக் கிடைத்த ரூ.77.96 லட்சமாக இருக்கும்.

SIP investment advantages

SIP முதலீடு காலப்போக்கில் கணிசமான வருமானத்தைக் கொடுப்பதை இந்த கணக்கீடுகள் பிரதிபலிக்கின்றன. ஒரு கோடி  ரூபாய் சேர்ப்பதை இலக்காக வைத்து SIP முறையில் முதலீடு செய்வது அதிக வருமானத்தை ஈட்ட உதவுகிறது. இந்த இலக்கை எட்டிய பிறகு இன்னும் பெரிய முதலீடுகள் மூலம், அடுத்த நிதி இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.

(இந்தச் செய்தி தகவல் தெரிவிருக்கும் நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும்.)

Latest Videos

click me!