Selvamagal Calculator: 1000 - 5000 ரூபாய் டெபாசிட்டுக்கு லட்சங்களில் அள்ளலாம்; சூப்பர் கால்குலேஷன்!!

First Published | Oct 16, 2024, 3:30 PM IST

செல்வமகள் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது, ​​ஒரு நல்ல தொகை தயாராக இருக்கும். இத்திட்டதிதல் ரூ.1000, ரூ.2000, ரூ.3000 அல்லது ரூ.5000 முதலீடு செய்தால் முதிர்வு வரை எவ்வளவு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Sukanya Samriddhi Yojana

எந்தவொரு இந்தியரும் 10 வயதுக்குட்பட்ட தனது மகளுக்கு செல்வ மகள் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்யத் தொடங்கலாம். தற்போது இத்திட்டம் 7.6 சதவீத வட்டியை வழங்குகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

SSY Scheme

இத்திட்டம் 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். ஆனால் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் போதும். எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு விரைவில் உங்கள் மகளுக்காக முதிர்வுத் தொகையை தயார் செய்ய முடியும்.

Tap to resize

Sukanya Samriddhi Yojana Investment

பெண் குழந்தை பிறந்த உடனேயே இத்திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், மகளுக்கு 21 வயதாகும்போது, ஒரு நல்ல தொகை தயாராகிவிடும். இத்திட்டத்தில் முதலீட்டுத் தொகை ரூ.1000, ரூ.2000, ரூ.3000 அல்லது ரூ.5000 என இருந்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

SSY calculator for Rs 1000 deposit

இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.12,000 டெபாசிட் செய்யப்படும். SSY கால்குலேட்டரின் படி, 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,80,000 முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதற்கு ரூ.3,29,212 வட்டி சேரும். இதன் மூலம், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.5,09,212 கிடைக்கும்.

SSY calculator for Rs 2000 deposit

மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.24,000 மூதலீடு செய்யப்பட்டிருக்கும். 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.3,60,000 ஆகவும், வட்டி ரூ.6,58,425 ஆகவும் இருக்கும். இரண்டும் சேர்த்து முதிர்வுத் தொகையாக ரூ.10,18,425 இருக்கும்.

SSY calculator for Rs 3000 deposit

மாதம் ரூ.3000 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்து பார்த்தால், ஆண்டுக்கு ரூ.36,000 டெபாசிட் செய்யப்படும். மொத்த முதலீடு ரூ.5,40,000 ஆக இருக்கும். வட்டி ரூ.9,87,637 ஆக இருக்கும். முதிர்வுத் தொகை ரூ.15,27,637 கிடைக்கும்.

SSY calculator for Rs 4000 deposit

மாதம் ரூ.4000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.48,000, 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.7,20,000 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். இதற்கு கிடைக்கும் வட்டி ரூ.13,16,850. திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன், மொத்தம் ரூ.20,36,850 கிடைக்கும்.

SSY calculator for Rs 5000 deposit

மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்தால் வருடத்துக்கு 60,000 ரூபாய் முதலீடு செய்யப்படும். 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9,00,000 முதலீடு செய்யப்படும். வட்டி ரூ.16,46,062 சேரும். முதிர்ச்சியின்போது, ​​25,46,062 ரூபாய் கிடைக்கும்.

Latest Videos

click me!