மாதம் ரூ.50,000 பென்ஷன் வழங்கும் சூப்பர் திட்டம்! உடனே உங்க அக்கவுண்ட் ஓபன் பண்ணணுங்க!

First Published | Oct 16, 2024, 12:46 PM IST

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) நல்ல ஓய்வூதிய நிதியை வழங்கி, முதுமையில் நிலையான வருமானம் பெற ஏற்பாடு செய்யும் திட்டமாகும். இதற்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

National Pension System

என்.பி.எஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம், பொது மக்களுக்கு முதுமையில் நிதி பாதுகாப்பு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு நல்ல தொகையைப் பென்ஷனாகப் பெற முடியும். ஒவ்வொரு மாதமும் உறுதியான வருமானம் கிடைக்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.

NPS account

இந்தத் திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டும் தொடங்கப்பட்டது. பின்னர் இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் விரிவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Tap to resize

NPS

இத்திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாகும். அதாவது, இதில் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும், அதற்குக் கிடைக்கும் வருமானம் சந்தை மாற்றங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. டயர் 1 கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். டயர்-2 கணக்கை தொடங்க டயர்-1 கணக்கு இருப்பது அவசியம்.

NPS Investment

60 வயதைத் தாண்டிய பிறகு, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த மொத்தத் தொகையில் 60 சதவீதத்தை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 40 சதவீத தொகை தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்யப்படும். இதிலிருந்து எவ்வளவு கிடைக்கும் வருமானம் மாதம்தோறும் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்த வருமானமும் சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும்.

NPS rules

35 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், தொடர்ந்து 60 வயதுவரை முதலீடு செய்ய வேண்டும். அதாவது 25 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். NPS கால்குலேட்டரின்படி, ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாயை 25 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், மொத்த முதலீடு 45,00,000 ரூபாயாக இருக்கும். இதற்கு 10% வட்டி ரூ.1,55,68,356 கிடைக்கும்.

Pensioners

இந்த வழியில், மொத்தம் 60 வயதை அடையும்போது ரூ.2,00,68,356 இருக்கும். இதில் 60% தொகையை, அதாவது ரூ.1,20,41,014 ஐ மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். எஞ்சிய 40% தொகை, அதாவது ரூ. 80,27,342 உங்கள் பென்ஷன் தொகையாக மாறும். இதற்கு 8% வருமானம் கிடைத்தால், ஒவ்வொரு மாதமும் 53,516 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

Latest Videos

click me!