Government Employees DA Hike: எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!

First Published | Oct 16, 2024, 6:34 PM IST

 7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த உயர்வால் 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படுகிறது. அதாவது இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு, பணவீக்கத்தைப் பொருத்து ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் என்பது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதம் வரை தாமதம் செய்யப்பட்டு அதன்பிறகு முன்தேதியிட்டு வழங்கப்படும். இந்நிலையில் தான் தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
 

Tap to resize

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்  இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் முடிவு செய்யப்பட்டது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள். இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். 

இந்த முடிவால் ஆண்டுக்கு ரூ. 9,448.35 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கனவே 50%ஆக இருந்த நிலையில் தற்போது 53% உயரும்.

முன்னதாக மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!