நமது நாட்டில் தங்கம் வாங்குறது ஒரு பாரம்பரியம். இது ஒரு முதலீடாகவும் பார்க்கப்படுது. ஆனால் தினமும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உச்சம் தொட்டு செல்கிறது. இந்தியாவின் சில இடங்களில் தங்கம் மற்ற பகுதிகளை விட குறைவான விலையில் கிடைக்கிறது. அவை எந்தெந்த இடங்கள்? என விரிவாக பார்ப்போம்.
மும்பையின் ஜவேரி பஜார்தான் இந்தியாவின் மிகப்பெரிய தங்க வர்த்தக மையம். நாட்டின் தங்கம், வெள்ளி வர்த்தகத்தில் பெரும்பகுதி இங்கிருந்துதான் நடக்குது. கல்யாண நகைகள் முதல் தினசரி போடும் டிசைன்கள் வரை எல்லாமே இங்கே ஹோல்சேல் விலையில் கிடைக்கும்.
டெல்லி, ஜெய்ப்பூர்
டெல்லியின் சாந்தினி சௌக்கில் 'கூச்சா மகாஜனி' என்ற சந்தை உள்ளது. இது வட இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சந்தை. இங்கு பிரம்மாண்டமான பிரைடல் நகைகள், குந்தன் வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் கிடைக்கும். இதேபோல், கொல்கத்தாவின் 'போ பஜார்', 'புர்ரா பஜார்' ஆகியவை பெங்காலி ஃபிலிகிரீ வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்றவை. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள 'ஜோஹரி பஜார்' பாரம்பரிய குந்தன், மீனாகாரி நகைகளுக்குப் பிரபலம்.
இதையும் படிங்க: Indian Railways: நீலம் டூ ரெட்.. ரயில்களின் நிறம் மாறியதன் ரகசியம்.. பின்னணியில் மாஸ் டெக்னாலஜி!