வைகை முதல் நெல்லை வரை.. முக்கிய ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.. மக்களே நோட் பண்ணிக்கோங்க!

Published : Dec 30, 2025, 03:28 PM IST

ஜனவரி 1ம் தேதி முதல் வைகை, நெல்லை, முத்துநகர் என முக்கிய ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
தமிழகத்தில் முக்கிய ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்

இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நாட்டில் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரத்தை மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

24
நெல்லை, வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1ம் தேதி முதல் மதியம் 1.45 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் முன்னதாக அதாவது மதியம் 1.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். 

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்தும் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும்.

34
பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இரவு 8.10 மணிக்கு பதிலாக 35 நிமிடங்கள் முன்னதாக இரவு 7.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து மாலை 6.45-க்கு பதிலாக மாலை 6.50-க்குப் புறப்படும்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக இரவு 7.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடியில் இருந்து இரவு 8.40-க்கு பதிலாக இரவு 9.05-க்குப் புறப்படும்.

44
வந்தே பாரத், குருவாயூர் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் இரவு 7.15 மணிக்கு பதிலாக இரவு 8.35 மணிக்கு புறப்படும். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 7.45 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு புறப்படும்.

 மறுமார்க்கமாக சோழன் எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10-க்குப் புறப்படும். சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மதியம் 2.45 மணிக்கு பதிலாக மதியம் 3.05 மணிக்கு புறப்படும். சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் காலை 10.20 மணிக்கு பதிலாக காலை 10.40 மணிக்கு புறப்படும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories