Agriculture: சீமான் சொல்ற மாதிரி மாடு மேய்க்குறது இனி 'ஹைடெக்' வேலை! அசத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

Published : Dec 30, 2025, 11:38 AM IST

சென்னையில் அறிமுகமான 'டிஜிட்டல் ஸ்டிக்' மாடு மேய்க்கும் தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கால்நடை மேலாண்மையை எளிதாக்கி, மேய்ச்சல் தொழிலை ஒரு 'ஹைடெக்' தொழிலாக மாற்றுகிறது.

PREV
19
என் இனத்து சொந்தங்களே...

என் இனத்து சொந்தங்களே... மாடு மேய்க்கிறதுங்கிறது கேவலமான வேலை கிடையாது, அது தான் இந்த மண்ணோட ஆதித் தொழில், அறம் சார்ந்த தொழில்!" என்று நாம் அடிக்கடி மேடைகளில் கேட்டிருப்போம். ஆனால், இன்று அந்தத் தொழில் உலகமே வியக்கும் அளவுக்கு 'ஹைடெக்' ஆக மாறிவிட்டது. சென்னையில் சமீபத்தில் நடந்த 'மேய்ச்சலிய மாநாட்டில்' அறிமுகமான ஒரு கருவி, ஒட்டுமொத்த கால்நடை வளர்ப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுதான் 'டிஜிட்டல் ஸ்டிக்' (Digital Stick).

29
மாடு மேய்க்க கையில் 'ஸ்மார்ட்' கம்பு!

இனி மாடு மேய்க்கும் கீதாரிகள் கையில் வைத்திருக்கும் கம்பு வெறும் மரக்கம்பு அல்ல; அது ஒரு தகவல் களஞ்சியம். போன்பிளாக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிஜிட்டல் கம்பில் என்னென்ன சிறப்புகள் இருக்கு தெரியுமா?

ஜி.பி.எஸ் (GPS) வசதி

 அடர்ந்த காட்டுக்குள்ளயோ அல்லது மலையோரத்திலயோ உங்க மாடு எங்க மேயுது, மேய்ப்பவர் எங்க இருக்கிறார் என்பதை செல்போன் மூலமே துல்லியமாகப் பார்த்துவிடலாம்.

நீண்ட நேர பேட்டரி

ஒருமுறை சார்ஜ் போட்டா போதும், 30 மணி நேரத்துக்கு மேல வேலை செய்யும். கரண்ட் இல்லாத இடத்துலயும் பயமில்லாம பயன்படுத்தலாம்.

மேய்ச்சல் டேட்டா

அந்தப் பாதையில் எந்த வகை புல் இருக்கு? எத்தனை கிடைகள் இருக்கு? எவ்வளவு தூரம் மாடுகள் நடந்து போயிருக்கு? என அத்தனை விவரங்களையும் இந்த டிஜிட்டல் கம்பு சேகரிச்சு கொடுத்துடும்.

39
சுற்றுச்சூழலின் உண்மையான காவலன்

 'மாடு' நாம் ஏதோ மாடு மேய்ப்பதை சாதாரண விஷயமாக நினைக்கிறோம். ஆனால், ஒரு மாடு 5 கிலோ பசுந்தீவனத்தை சாப்பிடும்போது, சுமார் 15 கிலோ கார்பன்-டை-ஆக்சைடை அது உறிஞ்சுகிறது. புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் மிகப் பெரிய 'இயற்கை மிஷின்' நமது கால்நடைகள் தான். 2050-ல் பால் மற்றும் இறைச்சியின் தேவை இரண்டு மடங்கு அதிகமாகப்போகிறது. அதைச் சமாளிக்க வேண்டுமானால், மேய்ச்சல் முறையிலான கால்நடை வளர்ப்புதான் ஒரே தீர்வு. அதற்காகவே, 2026-ம் ஆண்டைச் சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது.

49
இனி இது 'டிஜிட்டல்' விவசாயம்!

தமிழகத்தில் உள்ள 50 லட்சம் கால்நடைகளுக்கும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களுக்கும் டிஜிட்டல் வரைபடம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய கோரிக்கை. "ஆடு மாடு மேய்க்கிறது படிப்பு இல்லாதவனுக்குன்னு நினைச்ச காலம் போச்சு. இனி தொழில்நுட்பம் தெரிஞ்சவன்தான் மேய்ச்சல் தொழிலையே ராஜாவா செய்யப்போறான்" என்கிற உண்மையை இந்த டிஜிட்டல் ஸ்டிக் நிரூபித்துள்ளது. பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து, நம் மண்ணின் கால்நடைச் செல்வங்களைப் பாதுகாப்போம்!

59
கருவியின் விலை எவ்வளவு?

தற்போது இந்தக் கருவி ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சந்தையில் இன்னும் இதன் விற்பனை விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விவசாயிகளுக்கான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) மூலம் மானிய விலையில் அல்லது குறைந்த விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தனிப்பட்ட லாப நோக்கத்தை விட, கால்நடைத் தரவுகளைச் சேகரிக்கும் அரசின் திட்டங்களுக்கு உதவுவதால், விவசாயிகளுக்கு எட்டும் விலையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

69
கிராம விவசாயிகளுக்குப் புரியுமா?

நிச்சயமாக! இது கிராமத்து விவசாயிகளின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. கீதாரிகள் வழக்கம் போல வைத்திருக்கும் மேய்ச்சல் கம்பின் கைப்பிடியிலேயே இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இயக்கம்: இதில் சிக்கலான பட்டன்கள் கிடையாது. ஒருமுறை 'ஆன்' (On) செய்துவிட்டால், அது தானாகவே ஜி.பி.எஸ் மூலம் வேலை செய்யத் தொடங்கும். சில மாடல்களில் இரவு நேரத்தில் பாதை தெரிய மின்விளக்கு (Light) மற்றும் ஆபத்து காலத்தில் உதவும் அதிர்வு வசதிகளும் இருப்பதால், வயதான விவசாயிகளுக்கும் இது எளிதாக இருக்கும்.

79
தமிழகத்தில் எங்கு கிடைக்கும்?

தற்போது இது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) மற்றும் தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவற்றின் நேரடி மேற்பார்வையில் உள்ளது.இதைத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியையோ அல்லது உங்கள் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களையோ (VUPRC) அணுகி மேலதிக விவரங்களைக் கேட்கலாம்.

89
பராமரிப்பு எளிதா?

சார்ஜிங்

செல்போன் சார்ஜர் மூலமாகவே சார்ஜ் செய்துகொள்ளலாம்.

நீடித்து உழைக்கும்

மேய்ச்சலுக்குச் செல்லும்போது மழையிலோ அல்லது வெயிலிலோ இந்தக் கருவி பாதிக்கப்படாதவாறு 'வாட்டர் புரூஃப்' (Waterproof) தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது.

99
தொழில்நுட்பத்தால் உயர்வோம்!

தொழில்நுட்பம் என்பது கோட் சூட் போட்டவர்களுக்கு மட்டுமல்ல, கோவணம் கட்டிய விவசாயிக்கும் சொந்தமானது என்பதை இந்த முயற்சி நிரூபித்துள்ளது. பாரம்பரிய அறிவும், டிஜிட்டல் கருவிகளும் இணையும்போது, நமது கால்நடைச் செல்வம் பெருகும்; நம் மண்ணின் வளம் காக்கப்படும். மாடு வளர்ப்போம்... மண்ணைக் காப்போம்... தொழில்நுட்பத்தால் உயர்வோம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories