Published : Jun 16, 2025, 01:32 PM ISTUpdated : Jun 16, 2025, 01:34 PM IST
தங்கத்தை விட வெள்ளி அதிக லாபம் தரும் முதலீடாக இருக்கலாம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் தேவை மற்றும் உலகப் பொருளாதார நிலவரம் காரணமாக வெள்ளி விலை உயர்ந்து வருகிறது.
ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து தங்கத்தை வாங்குவதை விட, நூற்றுக்கணக்கில் முதலீடு செய்து வெள்ளி வாங்கினால் நல்ல ரிட்டன்ஸ் கொடுக்கும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். சீட்டு கட்டி வெள்ளி பொருட்களையும் வாங்கும் வசதி தற்போது நகைக்கடைகளில் உள்ளதால் வெள்ளி பொருட்கள் மீது முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
27
வெள்ளி விலை புதிய உச்சம்
தினமும் வெள்ளியின் விலையில் கிராமுக்கு 1 ரூாபாய் மட்டுமே ஏற்றமோ அல்லது இறக்கமோ இருக்கும் என்பதால் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை. ஆனால் தங்கத்தை விட வெள்ளி அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.வெள்ளி விலை கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், தொழில்துறை வேகமாக வளர்ந்து வருவதே வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. வெள்ளி என்பது மிகச் சிறந்த மின்னணு தூண்டு (excellent conductor of electricity). எனவே, மொபைல்கள், சூரிய ஒளிப்பலகைகள், மின்னணு உபகரணங்கள் ஆகியவற்றில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
37
வெள்ளியில் இப்படியும் செய்யலாம் முதலீடு
சில்வர் ஃபண்டுகளில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன என்றும் இனி வரும் காலத்திலும் பிசிகலாக வெள்ளியை வாங்குவதற்குப் பதிலாக, வெள்ளி இடிஎஃப் மற்றும் வெள்ளி FOF-ல் முதலீட்டை அதிகரிக்கலாம் என்றும் சந்தை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வெள்ளி விலையானது பியூச்சர் சந்தையில் அவுன்ஸூக்கு 36 டாலர்களுக்கு மேலாகக் காணப்படுகிறது. இது 13 ஆண்டுகள் உச்சத்தில் காணப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
வெள்ளி என்பது நம் நாட்டில் நகையாக மட்டும் அல்ல, பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையைப் பார்க்கும்போது, சென்னையில் 1 கிராம் வெள்ளி விலை ரூ.120 ஆக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய உயர்வாகும். 2015-ஆம் ஆண்டு வெள்ளி விலை சுமார் ரூ.45/கிராம் இருந்தது. அப்போது பொதுமக்கள் பெருமளவில் நகைக்கடைகளில் வெள்ளி வாங்கினார்கள். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல, பல்வேறு காரணங்களால் வெள்ளி விலை வளரத் தொடங்கியது. குறிப்பாக, 2020-ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் மக்களிடம் நிதி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அதிகரித்தது. அதனால் வெள்ளி முதலீடாக மாறியது. அந்நேரத்தில் வெள்ளி விலை ரூ.60/கிராம் வரை உயர்ந்தது.
57
மென்மேலும் உயர்ந்த வெள்ளி
அதன் பின் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இது மேலும் ₹80, ₹90 என உயர்ந்தது. 2025-ஆம் ஆண்டில் ₹120 வரை வந்துள்ளது. இதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் உள்ளன, உலகளவில் பொருளாதாரம் நிலைக்காத நிலை, பங்குசந்தையில் வீழ்ச்சி, மற்றும் மின்னணு, சூரியஒளி தொழில்நுட்பத் துறைகளில் வெள்ளியின் தேவை அதிகரித்திருப்பது ஆகிவையே இதற்கு காரணமாகும்.
67
சர்வதேச சந்தையில் வெள்ளி
சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2015-இல் ஒரு அவுன்ஸ் வெள்ளி $15 இருந்தது. இன்று அது $36 வரை உயர்ந்துள்ளது. 1 கிலோ வெள்ளி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.108,000 – ரூ.110,000 ஆகும். இந்த விலை உயர்வு, வெள்ளி ஒரு நிலைத்தன்மை வாய்ந்த முதலீடு என்பதை உறுதிப்படுத்துகிறது. மக்கள் தங்களது சேமிப்பை பாதுகாக்கவும், எதிர்கால தேவைக்காக முதலீடு செய்யவும் வெள்ளியை தேர்வு செய்கிறார்கள்.
77
உறுதியான உச்சம்
வெள்ளி விலை கடந்த 10 ஆண்டுகளில் மெதுவாகவும் உறுதியாகவும் உயர்ந்துள்ளது. இது சாதாரண மக்களுக்கு, சிறிய தொகையிலும் முதலீடு செய்யக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு என்பதை உணர்த்துகிறது.இப்போது வெள்ளி வாங்கும் ஒருவர், எதிர்காலத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வெள்ளி இனி ஆபரணத்திற்கு மட்டுமல்ல, நம்பிக்கையான முதலீட்டாகும்.