டோல் பிளாசாவுக்கு 20 கிமீ சுற்றளவில் வசிப்பவர்கள் மாதம் ரூ.340 பாஸ் எடுத்து டோல் கட்டணமின்றி பயணிக்கலாம். இந்த திட்டம் 2024 ஜூலை முதல் பைலட் திட்டமாக செயல்படுத்தப்பட்டு, வணிக வாகனங்களுக்கு பொருந்தாது.
கார் இருந்தா பெட்ரோல் போட்டால் மட்டும போட்டால் போதும் ஈசியா ஊர் சுற்றலாம் என்ன நினைப்பில் உள்ளவர்கள், பெட்ரோல் செலவை விட டோல் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நெடுஞ்சாலையெங்கும் உள்ள டோல் பிளாசாக்கள் நமது பர்சை பதம் பார்க்கின்றன. டோல் பிளாசாக்களை நீக்க வேண்டும் என்று எல்லா தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதற்கு இன்னும் சரியான நேரம் வந்ததாக தெரியவில்லை.
29
சிரமத்தை எதிர்கொள்ளும் உள்ளூர் வாசிகள்
ஒரு பகுதியில் டோல் பிளாசா அமைக்கும் பட்சத்தில் அந்த பகுதியில் இருக்கும் உள்ளூர் வாசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் சூழல் ஏற்படுகிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு செல்ல கிலோமீட்டர் கணக்கில் சுற்றி செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் உள்ளூர் வாசிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
39
20 கிமீ சுற்றளவில் வசிப்பவர்களுக்கு டோல் கட்டணம் கிடையாது
டோல் பிளாசாக்களுக்கு அருகிலுள்ள பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, டோல் பிளாசாவுக்கு 20 கிலோமீட்டர் சுற்றளவில் வாழும் நபர்கள் மாதத்திற்கு ஒருமுறை ரூ.340-க்கு பாஸ் எடுத்து, அந்த டோல் பாயிண்ட்டை எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் மூலம், அந்நிய செலவுகளைத் தவிர்க்கலாம் மற்றும் FASTag-ல் இருந்து பணம் மீண்டும் மீண்டும் கழிக்கப்படுவது போன்ற பிரச்சனைகளும் தவிர்க்கப்படும்.
இந்த புதிய கொள்கை 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பைலட் திட்டமாக சில தேசிய நெடுஞ்சாலைகளில் நடைமுறைக்கு வந்தது. GNSS (Global Navigation Satellite System) டிராக்கிங் தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் பட்சத்தில் அனைத்துதரப்பினரும் பயன்பெறுவர். ஆனால், இதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்து இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகே தெரிய வரும்.
59
ரூ.340-க்கு பாஸ் எடுப்பது எப்படி?
இந்த பாஸ் எடுக்க சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. 20 கிமீ சுற்றளவில் உள்ள உங்கள் முகவரியை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, மின் கட்டண ரசீது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். வாகன பதிவு சான்றிதழ் (RC), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செயலில் உள்ள FASTag கணக்கு விவரங்கள் ஆகியவற்றை தந்து மாதாந்திர பாஸ் எடுக்கலாம்.
69
எங்கே கிடைக்கும்?
நீங்கள் பாஸ் பெற விரும்பும் டோல் பிளாசாவின் நிர்வாக அலுவலகத்திற்கு செல்லவும்.அங்கிருந்து "இருப்பு வாடிக்கையாளர் மாத பாஸ்" விண்ணப்பப் படிவம் பெறுங்கள். தேவையான ஆவணங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்து ₹340 கட்டணம் செலுத்துங்கள். உங்கள் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு, FASTag கணக்கில் அந்த பாஸ் இணைக்கப்படும் அல்லது சில இடங்களில் பாஸ் அட்டையாக வழங்கப்படும்.
79
பாஸ் செல்லுபடியாகும் காலம்
ஒரு மாதம் மட்டுமே செல்லும்
ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க வேண்டும்
ஒரே ஒரு டோல் பிளாசாவுக்கு மட்டுமே செல்லுபடியாகும்
வாகனம் அல்லது முகவரி மாறினால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்
வணிக வாகனங்களுக்கு இந்த சலுகை கிடையாது
89
சிறந்த வாய்ப்பு – பயண செலவுகளை குறைக்கும் புதிய முறை
இந்த திட்டம் அரசு திட்டங்களை சரியாக பயன்படுத்தும் மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பணி காரணமாக தினமும் டோல் பிளாசா வழியாக பயணிக்கும் நபர்களுக்கு இது மிகுந்த சலுகையாகும்.
99
உள்ளூர் வாசிகளுக்கு கிடைத்த நிம்மதி
20 கிமீ சுற்றளவில் வசிப்பவர்கள் ரூ.340 மாத பாஸ் எடுத்து டோல் கட்டணமின்றி பயணிக்கலாம். இது வணிக வாகனங்களுக்கு பொருந்தாது.ஒரு மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் மறக்காமல் மாதாமாதம் புதுப்பிக்க வேண்டும்.இந்த திட்டம் உங்கள் பணச் செலவுகளை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு! FASTag வழியாக தவறுதலாக பணம் கழிக்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகிறீர்களா? உங்கள் உரிமையை பயன்படுத்தி, பாஸ் எடுத்து பயணித்துவிடுங்கள்!