இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலை $4,000 வரை அதிகரிக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய மதிப்பில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,000த்தை எட்டும் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா தான் உலகில் அதிகமாக தங்க கையிருப்பு வைத்திருக்கும் நாடு. இரண்டாவது இடத்தில் ஜெர்மனி, பின்னர் இந்தியா உள்ளது.இந்தியாவில், பொதுமக்கள் மற்றும் கோவில்களிடம் தான் உலகளவில் அதிகமாக தங்கம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்!. மொத்த உலக தங்கத்தின் சுமார் 11% வரை இந்திய பெண்கள் நகைகளாக வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்கா, IMF போன்ற நிறுவனங்களைவிட கூட அதிகம்!
28
திருமண சீசன் துவக்கம்
இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளதால் தங்கம் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகமாக உள்ளதால் நகைகளை வாங்கும் நிகழ்வுகள் தமிழகம் மட்டுமட்டுல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் தேவை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
38
அடித்தட்டு மக்கள் விரும்பும் மாத சீட்டு
காத்திருந்து விலை ஏற்றத்தை கணித்து தங்கத்தை வாங்குபவர்கள் குறைவு என்ற போதிலும் நகைக்கடைகளில் மாத சீட்டு கட்டி அதனை வாங்குபவர்கள் அதிகமாகவே உள்ளனர். சீட்டு கணக்கு முடிந்து பெரிய தொகை கொடுத்து தங்கத்தை வாங்கும் போது சிறுக சிறுக சேமிப்பதின் அருமையை அடித்தட்டு மக்கள் உணர்வார்கள் என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.
சர்வதேச அளவில் நிகழும் அரசியல் பொருளாதார மாற்றங்களும், போர் பதற்றமும் கூட தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும். ரஷ்யா - உக்ரைன் போர், இந்தியா - பாகிஸ்தான் போர், இஸ்ரேல் - ஈரான் போன் என எல்லா நிகழ்வுகளின் போதும் தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது. தங்கம், வெள்ளி நிலை சரிவடையும் போது அதனை வாங்கி ஆதாயம் அடைந்தவர்கள் மிகவும் குறைவு என கூறும் சந்தை வல்லுணர்கள், தங்கம் விலை மேலும் சரியும் என காத்திருந்வர்களே அதிகம் என தெரிவிக்கின்றனர்.
58
தங்கம் விலை புதிய உச்சம் தொடும்
இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நிலைமையின் தீவிரமடைதல், உலக சந்தைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதில் முக்கியமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் சாத்தியம் குறித்து வணிக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய நிலைமையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்தின் விலை $2,300 வரை உள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே மோதல் மேலும் தீவிரமடைந்தால், தங்க விலை $4,000 வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என Jefferies நிறுவனத்தின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
68
இந்திய மதிப்பில் இது என்ன அர்த்தம்?
தங்க விலை $4,000 என்ற அளவுக்கு சென்றால், இந்திய ரூபாயில்:
1 டாலர் = ₹83 (தற்காலிக கணிப்பு)
$4,000 × ₹83 = ₹3,32,000 (ஒரு அவுன்ஸ் தங்க விலை)
1 கிராம் தங்க விலை - சுமார் ரூ.11,000
78
இதன் தாக்கங்கள்
திருமண பருவத்தில் தங்கம் வாங்கும் பொதுமக்களுக்கு இது ஒரு பெரும் சுமையாக மாறும்.முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தில் அதிகம் திரும்புவதால், பங்குச் சந்தையில் இருந்து நிதி வெளியேறும் அபாயமும் உண்டு.இதனால் திருமணம் அல்லது பெரிய விழாக்களுக்கு தங்கம் வாங்க திட்டமிடுவோர், சிறு முதலீட்டாளர்கள் கனமுடன் தங்கத்தை வாங்க வேண்டும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
88
கவனமாக திட்டமிடவும்
இஸ்ரேல்-ஈரான் மோதல் உலக சந்தையில் தாக்கத்தை உருவாக்கி, தங்கத்தின் விலையை வரலாறு காணாத உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் 1 கிராம் தங்கம் ரூ.11000 ஆக விலை அதிகரிக்கும் நிலை உருவாகலாம். மக்கள் கவனமாகவும் திட்டமிட்டு முதலீடு செய்யவும் வேண்டிய நேரம் இது!