தங்கம் விலை சரிவு: நகைக் கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

Published : Jun 16, 2025, 10:51 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளால் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது சாதகமான நேரம்.

PREV
18
அனைவரும் விரும்பும் தங்கம்

ஐந்து நாட்களுக்கு பிறகு சென்னையில் ஆபரணத்தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் என்றாலே, நம் தமிழக மக்களுக்கு அது நம்பிக்கையின் அடையாளம். ஆபரணமாக அணிவதற்கும், முதலீடு செய்வதற்கும் தங்கம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதுபோன்ற நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ள தகவல், நகை வாங்க எண்ணியவர்களுக்கு ஓர் நல்ல செய்தியாக வந்துள்ளது.

28
தங்கம் விலை ஏன் குறைகிறது?

தங்கத்தின் விலை சர்வதேச சந்தை மற்றும் இந்தியா உள்ளநாட்டு சூழ்நிலையைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் பெரும்பாலும் டாலரில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ரூபாயின் மதிப்பு மேம்படுவதால், தங்க விலை குறைவடைகிறது.மத்திய வங்கி கொள்கை – வட்டிவீதிகள் குறைவாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கம் மீது அதிக ஈர்ப்பு காட்டுகிறார்கள்.சர்வதேச அரசியல் சூழ்நிலை – உலகளவில் நிலவும் பதற்றங்கள் (போர்கள், பெருந்தொற்று போன்றவை) தங்கத்தின் மீது நேரடியான தாக்கம் ஏற்படுத்தும்.

38
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூ.9305 ரூபாயாக உள்ளது. சவரணுக்கு 120 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 440 ரூபாயாக உள்ளது. மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லையிலும் ஒரு சவரன் ஆபணத்தங்கம் விலை 74 ஆயிரத்து 440 ரூபாயாகவே உள்ளது. அதேபோல, 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,660-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.61,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

48
வெள்ளி விலை நிலவரம்

இருந்த போதிலும் வெள்ளி விலையில் மாற்றம் காணப்படவில்லை. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் நல்ல வருமானத்தை கொடுப்பதால் அதனை வாங்கி பயன்பெறலாம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

58
நகை வாங்க இது சிறந்த நேரமா?

ஆம்! இப்போது தங்கம் விலை சற்று குறைவாக இருப்பதால், நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, திருமணத்திற்காக வாங்க விரும்புபவர்கள், சிறிய முதலீடு செய்ய நினைப்பவர்கள், குழந்தைகளுக்கான நகைகள் வாங்கும் பெற்றோர் தங்கத்தை வாங்கி பயன்பெறலாம். தங்கம் என்றால், நம் பணத்தை பாதுகாப்பாக வைக்கும் ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. வங்கிக் கணக்குகள் போல வட்டி கொடுக்காது என்றாலும், அதற்கான மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் நிலைத்திருப்பது வழக்கம்.

68
தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

BIS ஹால்மார்க் இருந்தால்தான் தரமான தங்கம் என்பதை உறுதி செய்யலாம். மெய்க்கிங் சார்ஜ் மற்றும் GST தனியாக கணக்கிடப்படுவதால், முழு விலையை அறிந்து வாங்கவும்.பழைய நகைகளை மாற்றும் சலுகைகள் இருப்பதை கவனிக்கவும்.

78
முதலீட்டுக்காக தங்கம் – நலமா?

தங்கத்தில் முதலீடு செய்வது நீண்டகால நன்மை தரும். தற்போது விலை குறைந்திருக்கிற நேரத்தில் வாங்கினால், எதிர்காலத்தில் விலை உயரும்போது நல்ல வருமானம் கிடைக்கும். அதனால்தான், நகையாக மட்டும் அல்லாமல், தங்க நாணயங்கள், தங்க பாண்டுகள் (Gold Bonds) போன்றவை மூலமாகவும் மக்கள் முதலீடு செய்கிறார்கள்.

88
குறைந்த விலை – சிறந்த வாய்ப்பு

இன்று தங்க விலை குறைந்திருப்பது, நகைப் பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஓர் நற்செய்தி. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே மாதிரியான விலை நிலவரம் இருப்பதால், மாநிலமெங்கும் ஒரே அளவிலான சந்தை நிலைத்தன்மை காணப்படுகிறது.தங்கம் வாங்கும் போது, தரத்தை உறுதி செய்து, நன்கு பரிசீலித்து முதலீடு செய்வது நல்லது. இன்றைய சந்தையின் நிலையில், "குறைந்த விலை – சிறந்த வாய்ப்பு" என்பது பொருந்தும்!

Read more Photos on
click me!

Recommended Stories