Save Rs 50 Daily: "மாத சம்பளம் போதவில்லை... சேமிக்கவே முடியவில்லை" என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் தினமும் ஒரு டீ அல்லது சிறிய செலவுக்கு சமமான ரூ.50-ஐ ஒதுக்கினால்கூட, நீண்ட காலத்தில் பெரிய தொகையை உருவாக்க முடியும் என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
எதிர்கால நிதி பாதுகாப்பு என்பது இன்று வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான கவலையாக மாறியுள்ளது. குறிப்பாக மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வருமானம் பெறும் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள், ஓய்வுக்காலத்திற்காக எவ்வாறு சேமிப்பது என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறார்கள்.
27
பொது வருங்கால வைப்பு நிதி
நிதி நிபுணர்களின் கருத்துப்படி, பெரிய தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. தினமும் ரூ.50, அதாவது மாதத்திற்கு ரூ.1,500 சேமிப்பதன் மூலம் நீண்ட கூட காலத்தில் குறிப்பிடத்தக்க நிதியை உருவாக்க முடியும். இதற்காக பலர் தேர்வு செய்யும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) உள்ளது.
37
ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி
பிபிஎப் என்பது மத்திய அரசு ஆதரவு பெற்ற நீண்டகால சேமிப்பு திட்டமாகும். தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதத்தை அரசு காலந்தோறும் மாற்றலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு அரசின் பாதுகாப்பு இருப்பதால், முதலீட்டுத் தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பது இதன் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள கணக்கின்படி, ஒருவர் 25 வயதில் இருந்து மாதம் ரூ.1,500 வீதம் தொடர்ந்து 35 ஆண்டுகள் பிபிஎப் திட்டத்தில் செய்தால், அவர் செலுத்தும் மொத்த முதலீடு சுமார் ரூ.6.30 லட்சம் மட்டுமே. ஆனால் கூட்டுவட்டி காரணமாக வட்டி ரூ.23 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும். இதன் மூலம் ஓய்வுபெறும் நேரத்தில் மொத்தமாக சுமார் ரூ.30 லட்சம் வரை நிதியை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
57
அரசு சேமிப்பு திட்டம்
அதே நேரத்தில், நீண்டகால முதலீட்டில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி போன்ற திட்டங்களையும் பரிசீலிக்கலாம் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். சராசரியாக ஆண்டுக்கு 12 சதவீத வருமானம் கிடைத்தால், மாதம் ரூ.1,500 முதலீடு 30 ஆண்டுகளில் சுமார் ரூ.50 லட்சம் வரை வளரக்கூடும் என கணக்கிடப்படுகிறது. இருப்பினும், இது சந்தை நிலவரத்தைப் பற்றியது. எனவே லாபத்திற்கு உத்தரவாதம் இல்லை.
67
பிபிஎப் வட்டி 7.1%
பிபிஎப் திட்டத்தில் சேமித்து ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் தொகை, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) அல்லது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால், மாதந்தோறும் நிலையான வருமானத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகான நிதி தேவைகளை எளிதாக திட்டமிட முடியும்.
77
ஓய்வூதிய சேமிப்பு
முதலீடு செய்வதற்கு முன், உங்கள் வருமானம், நிதி இலக்கு, முதலீட்டு காலம் மற்றும் ஆபத்து ஏற்கும் திறனை கருத்தில் கொண்டு திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. மேலும், பிபிஎப் வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகள் அரசால் மாற்றப்படக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.