ஆசியாவின் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி எப்போதுமே தனது விலை உயர்ந்த புடவைகள் மற்றும் நகைகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.
26
Nita Ambani
அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண விழாவில் நீதா அணிந்திருந்த புடவைகள் நகைகள் குறித்து தகவல் வெளியான வண்ணம் உள்ளன. இதுதொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நீதா அம்பானியிடம் விலை உயர்ந்த புடவைகள் மற்றும் நகைகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் நீதாவிடம் அரிய வைர மோதிரம் இருக்கிறது. இந்த வைர மோதிரத்தின் விலை ரூ. 54 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
46
Nita Ambani
மேலும் இந்த வைர மோதிரம் ஒரு காலத்தில் முகலாயப் பேரரசின் சேகரிப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.. இந்த மோதிரத்தில் புகழ்பெற்ற 'கோல்கொண்டா வைரச் சுரங்கங்களில்' இருந்து வாங்கப்பட்ட அரிய வைரம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
56
Nita Ambani
இந்த வைர மோதிரம் தோராயமாக 52.58 காரட் எடை கொண்டது எனவும் இந்த மோதிரம் 1800களுக்கு முன்பே இந்த மோதிரம் முகலாய பேரரசர்களிடம் இருந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டு கிறிஸ்டி என்பவரால் இந்த மோதிரம் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (தோராயமாக ரூ. 54 கோடி) ஏலம் எடுக்கப்பட்டது.
வைர மோதிரம் தவிர நீதாவிடம் மரகத கல் பதித்த வைர நெக்லஸ் ஒன்றும் உள்ளது. உன்னதமான மரகதம் பதித்த வைர நெக்லஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நெக்லஸின் விலை ரூ. 400-500 கோடி என்று கூறப்படுகிறது.