NPS Vatsalya: வங்கி வட்டியை விட அதிக வட்டி தரும் பெண்களுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டம்; சலுகைகள் ஏராளம்!!

First Published Jul 25, 2024, 9:15 AM IST

NPS Vatsalya: நடப்பு பட்ஜெட்டில் குழந்தைகளின் எதிர்கால நோக்கத்திற்காக NPS Vatsalya திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் SSY - சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் வழங்கப்படும் வட்டிவிகதத்தை விட அதிகமாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த முழு தகவல்களை இங்கே காணலாம்.

Union Budget

3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி அரசு கடந்த 12ம் தேதி 2024-25ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில், குழந்தைகளுக்காக NPS Vatsalya எனும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திட்டம் மற்ற முதலீட்டு திட்டங்களை காட்டிலும் கூடுதல் வட்டி விகிதத்துடன் லாபம் கிடைக்க வழிவகை செய்கிறது. மேலும், 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட SSY - Sukanya Samriddhi Yojana திட்டத்தை விட முதிர்ச்சி காலத்தில் அதிக லாபம் அளிக்கிறது
 

SSY திட்டம் Vs NPS Vatsalya

(Sukanya Samriddhi Yojana) சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டமும், புதிதாக அறிவிக்கப்பட்ட NPS Vatsalya திட்டமும் குழந்தைகளின் எதிர்கால நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. SSY போலவே NPS Vatsalya திட்டமும் குழந்தை பருவ வயது 18ஐ எட்டியவுடன் முதிர்ச்சி அடையும். என்.பி.எஸ். வத்சல்யா திட்டம் சாதாரண என்பிஎஸ் திட்டம் போல் செயல்படுவதால், முதிர்ச்சி அடைந்த கணக்குகள், விண்ணப்பதாரரின் விருப்பம் இல்லாத பட்சத்தில் அதை NON NPS கணக்காகவும் மாற்றிக்கொள்லாம்.

போஸ்ட் ஆபிஸ் RD : மாதம் இந்த தொகையை முதலீடு செய்தால்.. ரூ.17 லட்சம் ரிட்டர்ன் கிடைக்கும்..
 

Latest Videos


முதலீடும் வட்டி விகிதமும்

SSY - சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கலாம். இது சிறுசேமிப்பு திட்டமாகவே இயங்கும் காரணத்தால் ஆண்டு நிலவர சந்தைக்கு ஏற்றார் போல் அரசு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. 2024-25ம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.20% என நிர்ணயித்துள்ளது. இது பெண் குழந்தைகளுக்கான திட்டம் மட்டுமே.

என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தில் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப 12% முதல் அதிக வட்டி விகிதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. என்பிஎஸ் கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம், ஸ்டாக்ஸ் மற்றும் கடன் பத்திரங்களில் மறுமுதலீடு செய்யப்படுகிறது. ஆனால் எஸ்எஸ்ஒய் கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம் ஷேர் மார்க்கெட்களில் முதலீடு செய்யப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு

எஸ்எஸ்ஒய் திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்காக அவர்களது பெற்றோர்கள் இந்த திட்டத்தில் கணக்கை திறந்து முதலீடு செய்ய முடியும். மேலும் இது முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கான திட்டம் மட்டுமே. NPS Vatsalya திட்டத்திற்கு இப்போதைக்கு அடிப்படை வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதம் இல்லாமல் இருபாலருக்கும் என்பிஎஸ் வத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்து லாபம் பெறலாம்.

FD Rate Hike: மூத்த குடிமக்களுக்கு இப்போது 7.90 சதவீத வட்டி கிடைக்கும்.. எந்த பேங்க் தெரியுமா?
 

வரி சலுகை உண்டா?

SSY திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டில், 80C பிரிவின் கீழ் அவரது பெற்றோர் வரி விலக்கு பெற முடியும்.
NPS திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 80C இல்லாமல் 80CCB (1B)யின் கீழ் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 வரையில் வரி சலுகை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது,
 

click me!