Best Savings Scheme
எதிர்காலத்திற்கு பணத்தை சேமித்து, ஓய்வுகாலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அத்தகைய திட்டங்களில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தை போஸ்ட் ஆபீஸ், வங்கிகளில் மட்டுமின்றி தனியார் நிதி நிறுவனங்களிலும் பெற முடியும்.
FD Scheme
இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டிற்கான வட்டி வருவாயை அந்தந்த நிதி நிறுவனங்கள் முதலீட்டாளரின் கணக்கில் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு என்ற அடிப்படையில் செலுத்தும்.
RD Scheme
ஆனால் இந்த திட்டத்திற்கு மாற்றாக ஒரு திட்டம் உள்ளது. அது தான் ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் ஆர்.டி. திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை சேமிப்பதன் மூலம் முதிர்ச்சியின் போது அதிக தொகையை பெற முடியும். இந்த திட்டத்திற்கு அதிக வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. அதன்படி போஸ்ட் ஆபிஸில் 5 ஆண்டு ஆர்.டி முதலீட்டுக்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
Postoffice RD Scheme
அதன்படி, இந்த திட்டத்தில் ஒருவர் மாதம் ரூ.5000 வீதம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்றால் அவர் மொத்தம் ரூ.3 லட்சம் முதலீடு செய்து இருப்பார். 6.9% வட்டி கணக்கீட்டின் படி அவருக்கு வட்டியாக ரூ.58,716 கிடைக்கும்.
Postoffice RD Scheme
எனவே இந்த திட்டத்தின் முதிர்ச்சியின் போது ரூ.3 லட்சம் முதலீடு மற்றும் வட்டி ரூ.58,716 உடன் சேர்த்து மொத்த ரூ.3,58,716 கிடைக்கும். இதே திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் உங்களின் முதலீடு ரூ.6 லட்சமாகவும், வட்டி வருமானமாக ரூ. 2,63, 735 கிடைக்கும். எனவே 10 ஆண்டுகளின் முடிவில் மொத்தம் உங்களுக்கு ரூ.8,63,735 கிடைக்கும்.
Postoffice RD Scheme
அதே போல் இந்த திட்டத்தில் ஒருவர் மாதம் ரூ.10,000 வீதம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்றால் அவர் மொத்தம் ரூ.6 லட்சம் முதலீடு செய்து இருப்பார். 6.9% வட்டி கணக்கீட்டின் படி அவருக்கு வட்டியாக ரூ.1,17,432 கிடைக்கும். எனவே அவருக்கு மொத்தமாக ரூ.7,17,432 கிடைக்கும்.
Postoffice RD Scheme
மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்தால் அவருக்கு வட்டி வருமானமாக ரூ.5,27,462 கிடைக்கும். முதலீட்டு தொகை ரூ. 12 லட்சம் மற்றும் வட்டி வருமானத்துடன் சேர்த்து அவருக்கு மொத்தம் ரூ.17,27,462 கிடைக்கும்.
Postoffice RD Scheme
தற்போது போஸ்ட் ஆபீஸில் இருக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் இந்த கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதம் மாறுபடும்.