Published : Jul 25, 2024, 11:13 AM ISTUpdated : Jul 25, 2024, 11:17 AM IST
தனது மகனின் திருமணத்தில் பல்லாயிரம் கோடிகளை செலவு செய்த அம்பானி, தனது ஆடம்பர வீடான ஆண்டிலியாவின் கரண்ட் பில்லுக்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?
ஆசியாவின் மிகப்பெரிய பெரும்பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். இந்த திருமணத்திற்கு அம்பானி ரூ.5000 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது.
27
இதனால் இந்த திருமணம் உலகின் ஆடம்பரமான விலை உயர்ந்த திருமணமாக கருதப்படுகிறது. ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத், மெஹந்தி விழா தொடங்கி திருமணம், திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் என பல போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
37
தனது மகனின் திருமணத்தில் பல்லாயிரம் கோடிகளை செலவு செய்த அம்பானி, தனது ஆடம்பர வீடான ஆண்டிலியாவின் கரண்ட் பில்லுக்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் ஆண்ட்டிலியா என்ற பிரம்மாண்ட வீட்டில் வசித்து வருகிறார். 27 மாடிகள் கொண்ட இந்த ஆடம்பர வீட்டில் மினி தியேட்டர், 9 பெரிய லிஃப்ட், நீச்சல் குளம், ஹெலிபேடுகள், 100க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் இடம் என பல வசதிகள் இருக்கின்றன.
57
இந்த பிரம்மாண்ட வீட்டை கட்டி முடிக்க 6 ஆண்டுகள் ஆனது. 4 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டை கட்ட ரூ.15,000 கோடி செலவானதாக கூறப்படுகிறது. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் அரண்மனை போல் இருக்கும் வீடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
67
அம்பானிகளின் ஆண்டிலியா வீட்டில் சுமார் 600 பேர் பணிபுரிகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் சிலர் லட்சங்களில் சம்பளம் வாங்குகிறார்களாம்.
சரி, ஆண்டிலியா வீட்டிற்கு எவ்வளவு மின்கட்டணம் வரும்? இந்த வீடு மிகவும் உயரமானது என்பதால் உயர் அழுத்த மின் இணைப்பு கட்டாயம்.
மும்பையில் உள்ள 7000 நடுத்தர மக்கள் பயன்படுத்து மின்சாரம் ஆண்டிலியா வீட்டில் பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. யூனிட் அடிப்படையில் பார்த்தால், அம்பானியின் ஆண்டிலியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 6,37,240 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதாம். இதனால் இந்த வீட்டின் மின்சாரக் கட்டணம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.