வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.! இனி தொட்டதுக்கெல்லாம் அபராதம்.! ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய கட்டணங்கள்.!

Published : Mar 20, 2026, 12:55 PM IST

New ATM rules from April 1 2026 : வருகிற ஏப்ரல் 1, 2026 ஆம் தேதி முதல் சில வங்கிகள் தங்களது ஏடிஎம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
New ATM rules from April 1 2026 - புதிய ATM விதிகள்

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வங்கிகள் சில மாற்றங்களை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக புதிய நிதியாண்டு தொடங்கும் இந்த வேளையில் சில வங்கிகள் தங்களது விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பந்தன் வங்கி ஆகிய வங்கிகள் தங்களது ஏடிஎம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளன. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
HDFC வங்கி
  • ஹெச்டிஎஃப்சி வங்கி தனது ஏடிஎம் பண பரிமாற்ற விதிகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை ஏடிஎம்களில் QR கோடு ஸ்கேன் செய்து யுபிஐ மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட முறையில் கணக்கிடப்பட்டது. 
  • ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யுபிஐ மூலம் எடுக்கும் பணமும், ‘மாதாந்திர இலவச ஏடிஎம் பரிமாற்ற கணக்கிலேயே’ சேர்க்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இலவச பரிமாற்ற வரம்பு முடிந்த பிறகு ஒவ்வொரு கூடுதல் பண பரிமாற்றத்திற்கும் ரூ.23+GST வசூலிக்கப்படும். 
  • வழக்கம்போல ஹெச்டிஎஃப்சி ஏடிஎம்களில் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும், மற்ற இடங்களில் ஐந்து முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம் (UPI பரிமாற்றங்கள் உட்பட).
34
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

பஞ்சாப் நேஷனப் வங்கி தனது டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணமெடுக்கும் வரம்பைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

  • ரூ.50,000 வரம்பு: ரூபே பிளாட்டினம் (RuPay Platinum), விசா கோல்ட் (Visa Gold), மாஸ்டர்கார்டு பிளாட்டினம் போன்ற கார்டுகளுக்கு இதுவரை இருந்த ரூ.1,00,000 வரம்பு இப்போது ரூ.50,000-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • ரூ.75,000 வரம்பு: ரூபே செலக்ட் (RuPay Select) மற்றும் விசா சிக்னேச்சர் (Visa Signature) போன்ற உயர்வகை கார்டுகளுக்கு இதுவரை இருந்த ரூ.1,50,000 வரம்பு இப்போது ரூ.75,000-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
     

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், மோசடிகளைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

44
பந்தன் வங்கி
  • பந்தன் வங்கி ஏடிஎம் பரிமாற்ற கட்டணங்கள் மற்றும் இலவச வரம்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளது. பந்தன் வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு ஐந்து முறை நிதி சார்ந்த பரிமாற்றங்களை செய்யலாம். 
  • மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும் இலவசமாக பயன்படுத்த முடியும். இலவச வரம்பு முடிந்த பிறகு ஒவ்வொரு பரம் மாற்றத்திற்கும் ரூ.23 கட்டணமாக வசூலிக்கப்படும். 
  • வரம்பை மீறி பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணமில்லாத இதர சேவைகளுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். ஏடிஎம் இல் பணம் எடுக்கும் பொழுது உங்கள் கணக்கில் போதிய பணம் இல்லாமல் பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.25 அபராதமாக வசூலிக்கப்படும்.
     

முக்கிய குறிப்பு

இந்த புதிய நடைமுறைகள் வருகிற ஏப்ரல் 1, 2026 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. எனவே தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க புதிய விதிமுறைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories