தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.
25
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் காரணமாகும்.
35
சென்னையில் நேற்று (மே 16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் சவரனுக்கு ரூ.45,720க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,715க்கும் விற்பனை ஆனது.
45
அதேபோல வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.78.80க்கும், ஒரு கிலோ வெள்ளி 78,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய (மே 17) நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.
55
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,670க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து 78.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.