தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், நகை வாங்கும் ஆர்வம் மட்டும் மக்களிடையே குறையவில்லை. 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.
25
சவரனுக்கு 45 ஆயிரத்தை கடந்து தங்கமானது நகை வாங்குவோரிடமும், குறிப்பாக இல்லத்தரசிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததே என்று சொல்லலாம்.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ரூ.5,715க்கு விற்பனையானது. சவரன் ரூ.45,720-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கத்தை பொறுத்தவரை 8 கிராம் ரூ.49,472 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
45
ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் நேற்றைய விலையில் மாற்றமில்லாமல் இன்றும் தொடர்கிறது.
55
இன்றைய (மே 16) நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,715, சவரன் ரூ.45,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த செய்தி நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.