இந்திய ரூபாய் சமீபத்தில் கடுமையான சரிவை சந்தித்திருந்தாலும், தற்போது அதிரடியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலைக்கு சரிந்த ரூபாய், அதற்குப் பிறகு மிக வேகமாக திரும்பி வந்துள்ளது. இதன் பின்னணி காரணமாக ரிசர்வ் வங்கியின் திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இன்று வர்த்தகம் தொடங்கியவுடன், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சுமார் 1% உயர்ந்து 93.85 என்ற நிலையை எட்டியது. இதற்கு முன் வெள்ளிக்கிழமை, ரூபாய் 94.84 வரை வீழ்ந்திருந்தது.